Home காமசூத்ரா உங்கள் முதலிரவு ரகசியங்கள்

உங்கள் முதலிரவு ரகசியங்கள்

121

maxresdefaultTamilsex.com, tamilsex.com, www. tamil sex.com, tamil doctor, tamil sex tips, tamil kama kathaikal, tamil sex, tamil sex kathaikal, tamil sex padangal. tamil sex videos,tamilxdoctor, tamil x doctor, Tamil X doctor, antharanga kelvi, antharangam, tamil kama sutra,fist night,muthal ,udaluravu, kamakalai, antharankasukam, நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள் சுண்டக் காய்ச்சிய பால் இருக்கிறது. நடக்கும் வேகத்தில் அது சிந்தாமல் இருக்க அதை ஒரே ஒரு டம்ளரால் தலைகீழாக கவிழ்த்து மூடி வைத்திருக்கிறாள்.
அந்த அறையை நெருங்கியதும், முழுமையாக அல்லாமல் ஓரளவே விலக்கப்படுகிறது கதவு. அதற்குள் வெட்கத்தில் மலர்ந்த இளம்பெண் மட்டுமே நுழைய தயாராகிறாள். உடன் வந்த தோழியர் அவளது காதில் ஏதேதோ கிசுகிசுக்க, அவள் இன்னும் அதிகமாக வெட்கப்பட்டுக்கொண்டே அறைக்குள் செல்கிறாள். கதவை தாளிட்டுக் கொள்கிறாள்.

அறைக்குள் அலங்கரிக்கப்பட்ட அழகான படுக்கை. அங்கே, இரவில் பால் பாத்திரத்தை தேடும் பூனையின் கால்கள் போன்று மெதுவாக நகருகிறது அவளது சிவப்பு பாதங்கள்.

தனக்கு உரியவரை நெருங்கியதும், கையில் இருந்த பாலை அருகில் வைக்கிறாள். அடுத்ததாக, தனக்குரியவரது காலில் விழுந்து வணங்குகிறாள். அவரோ, அவளது சிலிர்த்த தோள்களை இரு கரங்களால் பற்றி தூக்குகிறார்.

படுக்கையில் இருவரும் அமர்கின்றனர். இருவருக்கும் இடையே சிறிய இடைவெளி மட்டுமே இருக்கிறது. சிறிது நேரத்தில் அந்த இடைவெளி காணாமல் போகிறது. நெருங்கி அமர்கிறார்கள். ஒருவரையருவர் அணைக்கிறார்கள். அங்கே புதிய உயிரின் தேடலை ஆரம்பிக்கிறார்கள்.

– இதுதான் நம் தமிழ் சினிமாக்களில் இதுவரை காண்பிக்கப்படும் முதலிரவு அறை காட்சிகள்.

ஆனால், நிஜ வாழ்க்கையில் என்ன நடக்கிறது?

நிச்சயமாக சினிமாவைப் போன்று இல்லைதான்!

ஏற்கனவே பார்த்து, பழகி, காதலித்து, அதன்பின் திருமணம் செய்து கொண்டிருந்தால் முதலிரவில் பெரும்பாலும் பதற்றம் இருக்காது. ஆனால், முதன் முதலாக அதில் சந்தித்துக் கொள்பவர்கள் எப்படி படபடத்துப் போவார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

அந்த இனிப்பான முதலிரவுக்கு சில இனிப்பான டிப்ஸ்

* முதலிரவில் உடல்கள் மட்டும் பின்னிப்பிணைவதில்லை. உள்ளங்களும் பின்னிப்பிணைகின்றன. அங்கே சந்திக்கும் இரு உள்ளங்களும் தங்களை முழுமையாக புரிந்திருக்க வேண்டும். அவர்களது மனமும் “உறவு”க்கு தயாராக இருக்க வேண்டும். அப்போதுதான் அங்கே காமன் வென்று காட்ட முடியும். காமசூத்ரா எழுதிய வாஸ்த்யாயனார் கூட திருமணம் ஆன 3 நாட்களுக்கு பிறகு செக்சில் ஈடுபடுவதே சிறந்தது என்கிறார். அதனால், முதலிரவு அன்றே முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று யாரும் முயற்சிக்க வேண்டாம். காமத்தில் உடனே வெல்வதைவிட மெல்ல மெல்ல வெல்வதில்தான் சுகம் அதிகம் இருக்கிறது.
* திருமணத்தன்று மணமக்கள் இருவரும் பதற்றத்தோடு இருப்பார்கள். மேலும், உடல் சோர்வும் அதிகமாக இருக்கும். பதற்றத்திலும், சந்தோஷத்திலும் சரியாக சாப்பிட்டுக்கூட இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், உறவினர்களை நன்றாக கவனிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டப்போய், மணமக்கள் சாப்பிட்டார்களா? இல்லையா? என்பதை கவனிக்காமல் கோட்டை விடும் பெற்றோரும் இருக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலிரவுக்கு தயாராகுவது என்பது கடினமான ஒன்றுதான். அதனால், அதை ஓரிரு நாட்களுக்கு தள்ளிப்போடுவதில் தவறே இல்லை. அதேநேரம், உங்கள் உடலும், உள்ளமும் ஆர்வமாக இருந்தால் நிச்சயம் உறவு வைத்துக்கொள்ளலாம். அதில் தவறில்லை.

* சில சினிமாக்களில் முதலிரவு அறையில் பழைய காதல்களை புரட்டிப் பார்ப்பதாக காட்டுகிறார்கள். அதை ரியல் லைப்பில் புரட்டிப் பார்ப்பது தவறு. நீங்கள் முன்பு காதலித்து இருந்தாலும் கூட, அதுபற்றி துணையே கேட்டாலும் வாய்திறக்கக்கூடாது. புதுமணத் தம்பதியர் முதன் முதலில் ஒன்றாக இருப்பது முதலிரவு அறையில்தான். அன்றைய தினம் என்ன பேசுகிறீர்களோ, அது வாழ்க்கையின் கடைசி வரைக்கும் நினைவிருக்கும் என்பதால் பேச்சில் கவனம், கட்டுப்பாடு தேவை.

* முதலிரவு அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். முதலிரவு இப்படித்தான் இருக்கும் என்று உங்கள் நண்பர் சொன்னால், அப்படித்தான் நமது முதலிரவும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக்கூடாது.

* திருமணத்திற்கு விலை உயர்ந்த நகைகள், பட்டுப்புடவைகள் வாங்குவதில் கவனம் செலுத்தும் நீங்கள் உள்ளாடை வாங்கும் விஷயத்திலும் அந்த கவனத்தை செலுத்தலாம். இப்போது பல்வேறு டிசைன்களின் உள்ளாடைகள் விற்பனைக்கு வருகின்றன. உங்கள் அழகை&கவர்ச்சியை அதிகரித்துக் காட்டுவதற்கு என்றே பிரத்யேகமான உள்ளாடைகளும் உள்ளன. முதலிரவில் இந்த மாதிரியான உள்ளாடைகள் உங்கள் அழகை அதிகரித்துக் காட்டுவதோடு “மூடை”யும் அதிகரிக்கும்.
* முதலிரவு அறையில்தான் முதன் முதலாக துணையை பிறந்த கோலத்தில் பார்க்க முடியும். சிலர், ஏதேதோ படங்களை பார்த்து, துணையையும் அதுபோன்று எதிர்பார்க்கலாம். அது தவறான கண்ணோட்டம். “நான் இவ்வளவு எதிர்பார்த்தேன். ஆனால், இப்படி ஆகிவிட்டதே. இன்னும் கொஞ்சம் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்குமே” என்பது போன்ற எண்ணங்களை மூட்டைக்கட்டி தூர எறிந்துவிடுங்கள். உண்மையைச் சொல்லப்போனால், அந்த மாதிரியான எண்ணங்களே வரக்கூடாது. மீறி வந்தால் செக்சில் இனிமையை காண முடியாது. அங்கே வெறுமைதான் மிஞ்சும்.
* குழந்தை பற்றிய விஷயத்தை முதலிரவிலேயோ அல்லது அதற்கு முன்போ முடிவெடுத்து விடுங்கள். குழந்தை இப்போதைக்கு வேண்டாம் என்றால் பாதுகாப்பான கருத்தடை சாதனைகளை பயன்படுத்தி உறவில் ஈடுபடுங்கள். குழந்தை உடனே வேண்டும் என்பவர்கள், குழந்தை உடனே பிறக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உறவு கொள்ள வேண்டாம். காரணம், அந்த எண்ணமே உங்களுக்கு மன நெருக்கடியை ஏற்படுத்திவிடலாம். உங்கள் மகிழ்ச்சிக்காகவும், துணையின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே உறவை வைத்திடுங்கள். அப்படியென்றால், கூடிய விரைவில் உங்கள் மனைவி கர்ப்பமாகி, அடுத்த 10-வது மாதத்தில் உங்கள் வீட்டில் குவா… குவா…. சத்தம் கேட்கலாம்.

* சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை என்பார்கள். இதனால்தான் என்னவோ, பெற்றோர்கள் பலர் அதுபற்றி தங்களது பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்க மறந்து விடுகிறார்கள். திருமணத்திற்கு காத்திருக்கும் ஒவ்வொருவரும் அதுபற்றி குறைந்தபட்சமாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்காக, டாக்டர்கள் பரிந்துரைத்த செக்ஸ் தொடர்பான ஆபாசம் இல்லாத புத்தகங்களை படித்து தெரிந்து கொள்வதில் தவறில்லை. ஆங்காங்கே பதுக்கி வைத்து விற்கப்படும் மஞ்சள் புத்தகத்தை மட்டும் வாங்கி படித்து விடாதீர்கள். மீறினால், உங்கள் செக்ஸ் கண்ணோட்டமே மாறிப்போய்விடும்.
* இப்போதெல்லாம், திருமணம் முடிவாகிவிட்டாலே தம்பதியராகப் போவோரை செல்போனில் மணிக்கணக்கில் கடலைபோட ஸாரி… பேச அனுமதிக்கிறார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் செக்ஸ் உள்ளிட்ட எல்லா விஷயங்களையுமே அவர்கள் பரிமாறிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. அந்த சூழ்நிலையில், நீங்கள் செக்ஸ் தொடர்பான தகவல்களை பரிமாறிக்கொள்வதில் நன்மையும் இருக்கிறது; அதேநேரம், தீமையும் இருக்கிறது. நன்மை என்றால், செக்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள் தீருகின்றன. தீமை என்றால், சந்தேகம் ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.
* முதலிரவிலேயே திருப்தி காண்பது பெரும்பாலும் முடியாத காரியம். சிலர் பதட்டத்தில் உடனே சோர்ந்து போகலாம். அப்படி சோர்ந்து போனால், “அய்யோ… நம்மால் முடியாதோ?” என்று மட்டும் எண்ணி விடாதீர்கள். அப்படி எண்ணிவிட்டால் செக்ஸ் என்ற சொல்லே உங்களுக்கு வெறுப்பை தந்துவிடும். நம்மால் முடியும் என்று நம்புகள். அப்படி நம்பினால் உங்களால் நிச்சயம் முடியும்.

மொத்தத்தில் செக்ஸ் என்பது அற்புதமான, அருமையான மருந்து. இந்த மருந்து மட்டும், உடலுக்கும், மனதுக்கும் சரியாக கிடைத்து வந்தால் மனநெருக்கடி கிட்ட வரவே வராது. மனநெருக்கடி இல்லையென்றால் நோய்கள் வர யோசிக்கும். நோய்கள் வராவிட்டால் நலமாக வாழலாம்தானே?
இப்படிப்பட்ட சிறப்புக்குரிய செக்ஸ் முதன் முதலாக அரங்கேறுவது முதலிரவில்தான். மேற்படி டிப்ஸ்களை உங்கள் வாழ்க்கையில் பின்பற்றினால் அந்த இனிய இரவில் நீங்கள் நிச்சயம் வென்று காட்டலாம்.