Home பெண்கள் பெண்குறி உங்கள் பிறப்புறுப்பு தளர்ச்சியா இருக்கா???

உங்கள் பிறப்புறுப்பு தளர்ச்சியா இருக்கா???

46

46_images5தளர்வா இருக்கே என்ற கவலையா உங்களுக்கு?,kegel exercise பிறப்புறுப்பு இறுக்கம் இன்றி தளர்வாக இருந்தாலோ, அரிப்பு போன்ற நோய் தொற்றுகள் இருந்தாலோ பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருக்காது. முக்கியமாக குழந்தை பிறந்த பிறகு இறுக்கம் தளர்ந்துவிட்டதாகவும், அதன் விளைவாக உறவில் நெருக்கம் குறைந்து விட்டதாகவும் பல பெண்கள் புலம்புவதுண்டு. இதனால் மனரீதியாக சிக்கல்களுக்கும் ஆளாவதுண்டு. இந்த தளர்வினை எளிதாக சரி செய்து விடலாம் என்கின்றனர் நிபுணர்கள்

பெண் குறியின் உட்பகுதி 45 டிகிரி மேல் நோக்கிச் செல்கிறது. கிளர்ச்சியுறாத நிலையில் அதன் சுவர்கள் சுருங்கியுள்ளன. கிளர்ச்சியின் போது விரிந்து தருகின்றன. குழந்தை பெறாத பெண்ணின் உறுப்பு 8 செ.மீ. நீளம்,. முன் சுவர் 6 செ.மீ. நீளம் இருக்கும். ஒரு விரலைக் கெட்டியாகப் பிடிக்கும் அளவு அதன் குறுக்களவு அமையும். குழந்தை பெறும் போது குழந்தையின் தலை வெளியே வரும் அளவு விரிந்து கொடுக்கும். ஆகவே சிறிய ஆண்குறி, பெரிய ஆண்குறி என்னும் வேறுபாடு இதற்கு இல்லை.

என்னதான் சுருங்கிய போதிலும் பெண்குறியின் உட்சுவர் ஆண்குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதை வெளியே விடாத வண்ணம் சிறைப்படுத்தும் அளவு வலிமை இல்லாதது. இந்த வல்லமை மிருகங்களில் நாய்க்கு மட்டும் அமைந்துள்ளது. நாயின் பெண் குறியில் இப்படி பூட்டி வைத்துக் கொள்ளும் அமைப்பு உள்ளது.

பெண்குறியின் உட்சுவர்த் தசைகளைச் சுருக்கும் பயிற்சி மூலம் இன்ப உணர்வுகளை அதிகரிக்கலாம் என்ற நோக்கில் அதற்கென உள்ள சில பயிற்சிகள் தரப்படுகின்றன.
சிறுநீர் கழிக்கும் போது நிறுத்தி நிறுத்திக் கழிப்பது ஒரு பயிற்சி. சும்மா இருக்கும் போது ஆசன வாய்த்தசைகளை இறுக்கியும், தளர்த்தியும் ஒரு பயிற்சி, கெகல் (kegel exercise) என்று இதனைச் சொல்கின்றனர். மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சரியாகச் செய்கிற பட்சத்தில் கட்டாயம் பலனளிக்குமாம்.