Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்க சில செக்ஸியான வழிகள்!!!

உங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்க சில செக்ஸியான வழிகள்!!!

23

10-1441860181-1-dancingஉங்கள் துணையுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்க நினைக்கிறீர்களா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உதவியாக இருக்கும். பொதுவாக தனியாக ஜிம் செல்வது, வாக்கங் செல்வது அல்லது வேறு எங்கும் செல்வதற்கு யாருக்கும் விருப்பம் இருக்காது. இச்செயல்களை மேற்கொள்வதற்கு தம்முடன் நண்பர்கள் அல்லது துணை இருக்க வேண்டுமென்று தோன்றும்.

மேலும் இப்படி செய்வதன் மூலம், துணையுடன் நேரத்தை செலவிட்டது போன்றும் இருக்கும், வாழ்க்கை முறையும் ஆரோக்கியமாக இருக்கும். சரி, இப்போது துணையுடன் சேர்ந்து உடல் எடையைக் குறைக்க உதவும் செக்ஸியான வழிகளைப் பார்ப்போமா!!!

நடனம்
படங்களில் மட்டும் தான் கணவன், மனைவி டூயட் பாட வேண்டும் என்பதில்லை. நிஜத்திலும் கணவன், மனைவி நடன வகுப்பில் சேர்ந்து கொண்டு, நடனம் கற்றுக் கொள்ளலாம். இதனால் உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் எரிவதோடு, துணையுடன் சற்று ரொமான்ஸ் செய்தது போன்றும் இருக்கும்.

ட்ரெட்மில்
ஜிம்மில் தனியாக ட்ரெட்மில்லில் ஓடுவதற்கு பதிலாக, துணையையும் உடன் சேர்த்துக் கொண்டு ஓடலாம். இதனால் இருவருக்குள் சிறு போட்டியுடன் விரைவில் உடல் எடையைக் குறைக்க முடியும்.

ஜாக்கிங்
அதிகாலையில் வேகமாக எழுந்து, 30 நிமிடம் துணையுடன் சேர்ந்து ஜாக்கிங் மேற்கொள்ளலாம். இதன் மூலமும் உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ளலாம்.

சைக்கிளிங்
துணையுடன் பைக்கில் சுற்றுவதற்கு பதிலாக, காலையில் சிறிது தூரம் சைக்கிளில் சென்றால், கால் மற்றும் தொடை நன்கு வலுப்பெறும். மேலும் உடல் எடையும் குறையும்.

உடலுறவு
ஆய்வுகளில் கூட உடலுறவு கொள்வதன் மூலம் கலோரிகள் எரிக்கப்பட்டு, உடல் எடை குறையும் என்று தெரிய வந்துள்ளது. சொல்லப்போனால் மற்ற வழிகளை விட, இந்த வழியின் மூலம் தான் எளிதில் கொழுப்புக்களை கரைக்க முடியுமாம்.

டயட்
துணையுடன் சேர்ந்து டயட் மேற்கொள்ளலாம். அப்படி டயட் மேற்கொள்ளும் போது நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் கலோரிகள் குறைவான உணவுகளை சேர்த்துக் கொள்ளவும்.

பைக் அல்லது காரை துடைக்கவும்
இதுவரை நீங்கள் தனியாக உங்கள் பைக் அல்லது காரை துடைத்தால், இனிமேல் உங்கள் துணையுடன் சேர்ந்து சற்று ரொமான்ஸ் செய்து கொண்டே துடையுங்கள். இதனாலும் எடையைக் குறைக்கலாம்.

டின்னர் வாக்
இரவில் உணவை உண்ட பின்னர், துணையுடன் சேர்ந்து சிறிது தூரம் வாக்கிங் மேற்கொள்ளலாம். இதனால் உடலில் உள்ள கொழுப்புக்கள் குறைவதோடு, உண்ட உணவுகளும் செரித்து, இரவில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.

வீட்டு சமையல்
துணையுடன் கடைகளில் சாப்பிடுவதற்கு பதிலாக, வீட்டில் அவருடன் சேர்ந்து சமைத்து சாப்பிடுங்கள். இதனால் நல்ல ஆரோக்கியமான உணவை உண்ணுவதோடு, எடையையும் குறைக்கலாம்.

ஆடையின்றி யோகா
இந்தியாவில் இப்பழக்கம் இல்லாவிட்டாலும், யோகாவின் மகிமை உங்களுக்கு தெரிந்திருந்தால், உங்கள் துணையுடன் வீட்டில் இந்த மாதிரி யோகாவை மேற்கொள்ளலாம். விருப்பமில்லாதவர்கள், ஆடையுடனேயே யோகா செய்யலாம்.