அழற்சியின் எந்த அடையாளமும் இல்லாமல், சருமம் உதிர்தல், செதில் செதிலாக உதிர்தலையே சரும வறட்சி என்கிறோம் இதனை மருத்துவத் துறையில் க்செரோசிஸ் என்பர்.
கடினமான சோப்புகள், அரிப்பை ஏற்படுத்தும் உடைகள், அதிக வெப்பமான நீரில் நீண்ட நேரம் குளிப்பது போன்ற காரணங்களால், லிப்பிடுகள் தீர்ந்துபோவதால் சரும வறட்சி ஏற்படுகிறது. குறைந்த ஈரப்பதத்துடன் கூடிய குளிர்ச்சியான அல்லது வெப்பமான காலநிலையில் இருப்பது, இப்பிரச்சனையை ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் சார்ந்த ஒரு காரணமாக உள்ளது.
சருமத்தை ஆரோக்கியமாகவும் ஈரப்பதத்துடனும் வைத்துக்கொள்ள சில அற்புதக் குறிப்புகள் இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ளன.
குளிப்பதும் ஷவரில் குளிப்பதும் உங்கள் பிரச்சனையை இன்னும் மோசமாக்காமல் தடுக்கும் வழிகள் (Ways to prevent baths and showers from making your condition worse):
வறண்ட சருமம் இருந்தால், பின்வருபவற்றைப் பின்பற்றவும்:
5-10 நிமிடங்களுக்கு மேல் குளிக்காதீர்கள் / ஷவரில் நிற்காதீர்கள்
வெந்நீருக்கு பதில் வெதுவெதுப்பான நீரைப் பயன்படுத்தவும். ஏனெனில் அதிக சூடான நீரில் நீண்ட நேரம் குளித்தால் உடலில் உள்ள இயற்கையான எண்ணெய்ப்பசை இழக்கப்படும்.
எண்ணெய் மற்றும் கொழுப்பு சேர்க்கப்பட்ட மென்மையான சோப்புகளைப் பயன்படுத்தவும். ஆல்கஹால், ஆல்பா-ஹைட்ராக்சி அமிலம் (AHA), ரெட்டினாய்டுகள் அல்லது நறுமணம் உள்ள ஆன்டிபாக்டீரியல் சோப்புகளையும் டியோடரண்ட் சோப்புகளையும் பயன்படுத்த வேண்டாம்.
அழுக்கையும் எண்ணெய்ப்பசையையும் அகற்ற கெட்டியான நுரை உண்டாக்கும் தயாரிப்புகளைத் தவிர்த்து, அதற்குப் பதில் க்ளென்சரைப் பயன்படுத்தவும்.
சருமம் சேதமடைவதைத் தடுக்க, பாத் ஸ்பாஞ், வாஷ்கிளாத், ஸ்க்ரப் போன்றவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவற்றைப் பயன்படுத்த விரும்பினாலும், லேசாகப் பயன்படுத்தவும்.
குளித்தவுடன் 20 வினாடிகளில் டவலால் அல்லது தட்டித் தட்டி சருமத்தை உலர்த்தவும். டவலைக் கொண்டு துடைக்கும்போது, சருமத்தைப் போட்டுத் தேய்க்க வேண்டாம்.
சருமத்தை உலர்த்தியவுடன் மாய்ஸ்டுரைசிங் கிரீம் அல்லது எண்ணெயைப் பூசவும். கைகளைக் கழுவும்போதெல்லாம் கைகளுக்குப் போட்டுக்கொள்ள ஒரு கிரீஸ் அல்லாத கிரீமை உடன் வைத்திருக்கவும்.
சருமத்தின் இயற்கையான லிப்பிடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், சருமத்தின் வெளி அடுக்கில் ஈரப்பதத்தைத் தக்கவைத்துப் பூட்டுவதன் மூலம் நீரிழப்பைக் கட்டுப்படுத்தவும் மாய்ஸ்டுரைஸர்கள் உதவுகின்றன. மாய்ஸ்டுரைஸர்கள், எளிதில் பாதிப்படையக்கூடிய, சேதமடைந்த சருமத்தைப் பாதுகாத்து, மென்மையாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்ள உதவுகின்றன.
செரமைடுகள், கிளிசரின், ஹையாலுரோனிக் அமிலம், சார்பிட்டால் மற்றும் லெசித்தின் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் மாய்ஸ்டுரைஸர்களைத் தேர்ந்தெடுக்கவும். இவை ஈரப்பதத்தை ஈர்த்துக்கொள்ள உதவுகின்றன.
எரிச்சலை உண்டாக்காத பண்புள்ள உடைகளையும் டிடர்ஜெண்டுகளையும் பயன்படுத்தவும் (Use non-irritating clothing and laundry detergent)
உடைகள் மற்றும் கடுமையான டிடர்ஜெண்டுகளால் வறண்ட சருமம் மேலும் எரிச்சலடைவதைத் தடுக்க சில குறிப்புகள்:
கம்பளி போன்ற பிற வகை உள்ளாடைகளுக்குப் பதிலாக (அவை ஆரோக்கியமாக இருக்கும் சருமத்திலும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்) காட்டன் அல்லது பட்டு போன்ற இயற்கையான பொருளால் நெய்யப்பட்ட உள்ளாடைகளை அணியுங்கள்.
ஆடைகளைத் துவைப்பதற்கு, வாசனை திரவியங்கள் அல்லது சாயங்கள் கொண்டிருக்காத, ஒவ்வாமை குறைவான டிடர்ஜெண்டுகளைப் பயன்படுத்துங்கள்.
உங்கள் சருமத்திற்கு எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய கம்பளி உள்ளிட்ட துணிகளைத் தவிர்க்கவும்.
தோலை சொறியவோ கீறவோ வேண்டாம் (Do not scratch or rub the skin)
பெரும்பாலும் மாய்ஸ்டுரைஸர் பயன்படுத்துவது அரிப்பையும் கட்டுப்படுத்தும். அரிப்புள்ள பகுதிகளில் குளிர் ஒற்றடம் அல்லது பேக் போடுவதன் மூலம் அரிப்பையும் குறைக்கலாம்.
குளிர்காலத்தில் ஹியூமிடிஃபயரைப் பயன்படுத்தவும் (Use a humidifier in winter)
உலர்ந்த மற்றும் சூடான காற்று தோலை நன்கு பாதிக்கக்கூடும். தோலுக்கு தேவையான ஊட்டங்களை மீண்டும் கிடைக்கச் செய்ய ஹியூமிடிஃபயர்களைப் பயன்படுத்தவும்.
இந்தக் குறிப்புகளைப் பின்பற்றியும் நிவாரணம் கிடைக்காவிட்டால் அல்லது நீண்ட காலமாகவே சரும வறட்சிப் பிரச்சனை உங்களுக்கு இருக்கிறதென்றால், சரும மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும்.