Home குழந்தை நலம் உங்கள் குழந்தைக்கு எப்போதெல்லாம் ஆன்டி-பயாடிக்ஸ் தேவை என தெரியுமா?

உங்கள் குழந்தைக்கு எப்போதெல்லாம் ஆன்டி-பயாடிக்ஸ் தேவை என தெரியுமா?

39

sinus-infectionஉங்கள் குழந்தைக்கு கண்டிப்பாக ஆன்டி-பயாடிக் தேவையா? ஒவ்வொரு முறையும் அவர்கள் நோய்வாய் படும் போது இதை தான் எப்போதும் நீங்கள் கேட்பீர்கள். தற்போது மருந்து எதிர்ப்புத் தன்மை மிகப்பெரிய உடல்நல அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இதற்கான விடைக்கு நாங்கள் வழிகாட்டுகிறோம்.
பொதுவான சளி
மருந்து வேண்டுமா வேண்டாமா? வேண்டாம். சளி என்பது நுண்ணுயிர் சுகவீனம். அது ஆன்டி-பயாடிக்கிற்கு ஒத்துழைக்காது. “நோய்வாய் பட்டிருக்கும் உங்கள் குழந்தையின் உடல்நலம் தேறினால், மெதுவாக இருந்தாலும் கூட, மருந்து தேவையில்லை.”
சைனஸ் தொற்று (சைனசிட்டிஸ்)
மருந்து வேண்டுமா வேண்டாமா? அறிகுறிகள் தீவிரமாகாதவரை தேவையில்லை. அதனால் 7 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்குமாறு குழந்தை நல மருத்துவர் பரிந்துரைப்பார். ஆனால் காய்ச்சலுடன் சேர்த்து அறிகுறிகள் தீவிரமடைந்தால் (பச்சை நிற மலம், நாசி அடைப்பு, முக வலி மற்றும் சைனஸ் தலைவலி) அவர் ஆன்டி-பயாடிக்ஸ் பரிந்துரைப்பார்.
காது தொற்று
மருந்து வேண்டுமா வேண்டாமா? சில நேரங்களில். குழந்தைகளுக்கு நடு காதில் ஏற்படும் தொற்றுக்களை ஆன்டி-பயாடிக்ஸ் இல்லாமலேயே குணப்படுத்திவிடலாம். அதற்கு காரணம், 80 சதவீதம் மருந்து இல்லாமலேயே குணமாகிவிடும். இருப்பினும், 6 முதல் 24 மாதமுள்ள குழந்தைகளும், தீவிர அறிகுறிகளைக் கொண்டுள்ள பெரிய குழந்தைகளும் உடனடியாக வாய்வழி ஆன்டி-பயாடிக்ஸை எடுத்துக் கொள்ளலாம். வெளி காதுகளில் தொற்று ஏற்பட்டால் ஆன்டி-பயாடிக் காது சொட்டு மருந்து பயன்படுத்தலாம்.
தொண்டைப்புண்
மருந்து வேண்டுமா வேண்டாமா? ஸ்ட்ரெப் நிலை ஏற்பட்டால் மட்டும். முக்கால்வாசி தொண்டை புண்கள் ஏற்படுவது நுண்ணுயிர்களால். இதற்கான விதிவிலக்காக உள்ளது குரூப் ஏ ஸ்ட்ரெப்ட்டோக்காக்கஸ். இது ஏற்படும் போது நிமோனியா மற்றும் சீழ்ப்பிடிப்பு போன்றவைகள் ஏற்படும். முக்கால்வாசி ஸ்ட்ரெப் தொற்றுக்கள் தானாகவே மறைந்து விடும். இதயத்தைப் பாதிக்கக்கூடிய கீல்வாத காய்ச்சல் என்ற தீவிர அழற்சி நோயைத் தடுக்க சில நேரங்களில் மருத்துவர்கள் ஆன்டி-பயாடிக்ஸ் பரிந்துரைப்பார்கள். உங்கள் குழந்தைக்கு தொண்டை புண் ஏற்பட்டால், உங்கள் மருத்துவர் உடனடியாக ஸ்ட்ரெப்புக்கான விரைவு சோதனையை மேற்கொள்வார். மேலும் கல்ச்சர் சோதனையும் மேற்கொள்ளப்படும். உடனே முடிவு தெரிய ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகும். நேர்மறையான முடிவு தெரிகிறதா என்பதை உறுதி செய்யும் வரை ஆன்டி-பயாடிக்ஸைத் தவிர்க்கலாம்.
மூச்சுக் குழாய் அழற்சி
மருந்து வேண்டுமா வேண்டாமா? அரிதாக. ஆரோக்கியமாக உள்ள குழந்தைகளுக்கு சளியினால் ஏற்படும் தீவிரத்தால் இந்த சுகவீனம் (நுரையீரலுக்கு காற்றை எடுத்துச் செல்லும் குழாய்களின் சுவரில் ஏற்படும் அழற்சி) ஏற்படும். மேலும் இது பாக்டீரியாவால் அல்ல. ஆனால் பாக்டீரியாவால் (கக்குவான், கக்குவான் இருமல் போன்றவைகள்) இந்த ஆழற்சி என உங்கள் மருத்துவர் சந்தேகப்பட்டால், உங்கள் குழந்தையின் சளியை கல்ச்சர் சோதனை மேற்கொள்வார். அதன் முடிவு நேர்மறையாக இருந்தால், ஆன்டி-பயாடிக்ஸ் கொண்டு அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.
நுரையீரல் அழற்சி (நிமோனியா)
மருந்து வேண்டுமா வேண்டாமா? குழந்தையின் அறிகுறிகளைப் பொறுத்தது. நுரையீரல் அழற்சி என்பது பாக்டீரியா அல்லது நுண்ணுயிரால் ஏற்படலாம். அது எதனால் என்பதை மருத்துவர்களால் கூட சுலபமாக சொல்லி விட முடியாது. குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா பெரும்பாலும் நுண்ணுயிர்களாலேயே. நிமோனியா என மருத்துவர்கள் கண்டறிந்தால் முழுமையான பரிசோதனைக்கு பிறகு, அதற்கான சிகிச்சையை தொடர வேண்டும்.
லைம் நோய்
மருந்து வேண்டுமா வேண்டாமா? ஆம். இத்தகைய நோய்கள் பெரும்பாலும் நூற்றில் இருபத்தைந்து சதவீதம் குழந்தைகளுக்கு ஏற்படுகிறது. இத்தகைய பாக்டீரியா இருப்பதை சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டால், இரண்டு முதல் நான்கு வார காலத்திற்கு ஆன்டி-பயாடிக்ஸ் எடுத்துக் கொள்ள வேண்டும். மூட்டு, இதயம் மற்றும் நரம்பியல் பாதிப்பை தடுக்க சீக்கிரமாகவே சிகிச்சை எடுப்பது அவசியமாகும். உங்கள் குழந்தை சோர்வடைந்தாலோ, அல்லது பேசவோ யோசிக்கவோ சிரமப்பட்டாலோ அல்லது தலைவலி, குமட்டல் என கூறினாலோ உடனடியாக சோதனையை மேற்கொள்ளுங்கள்.