அனைவருக்கும் முதல் காதல் அவரவர் விரும்பியவாறு அமைந்துவிடுவதில்லை. பொதுவாக ஓர் கூற்று உண்டு, யாருக்கும் ஓர் பொருள் அவரிடம் இருக்கும் போது அதன் மதிப்பு தெரியாது, அவரைவிட்டு நீங்கிய பிறகு தான் அதை உணர்வார்கள். ஆம், இது காதலில், உறவில் கண்கூட முடியும்.
சிலர் அவர்களுக்கே தெரியாமல், அவர்களது உறவை சில அசிங்கமான செயல்களின் காரணத்தால் கொன்றுக் கொண்டிருப்பார்கள். தன்னலத்தோடு உறவை நடத்தி செல்வது, தனக்கு தேவையான போது மட்டும் வந்து பார்த்து செல்வது. அவரது சூழல் என்னவென்று அறியாமல், தன்னிலை சுட்டிக்காட்டி தப்பித்துக் கொள்வது என நிறைய இருக்கின்றன…
செயல் # 1
சாரி! மீண்டும், மீண்டும் தவறு செய்துவிட்டு சாரி சொல்லிக் கொண்டே இருப்பது. ஒரு அளவுக்கு மேல், இது உங்கள் மீதான மதிப்பு மற்றும் அன்பை குறைக்க செய்துவிடும்.
செயல் # 2
பேசுவதற்கு முனையாமல் இருப்பது! ஏதேனும் பிரச்சனை என்றால் அதை பேசி தீர்ப்பதை விட்டுவிட்டு, நழுவிக் கொண்டு ஓட நினைப்பது.
செயல் # 3
தனியாக விடு! எந்த ஒரு சூழலாக இருப்பினும் இருவரும் சேர்ந்து இருப்பது தான் உறவு. சூழல் சரியில்லை எனில், அவரை விட்டு விலகியிருக்க நினைப்பது தவறு.
செயல் # 4
அக்கறையின்மை! இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அக்கறை செலுத்த வேண்டும். நான், என் வேலை என்று இருப்பதும், தேவையான போது மட்டும் சேர்ந்துக் கொள்வது உறவே இல்லை.
செயல் # 5
நேரமின்மை! பார்த்து பேசுவதற்கு கூட நேரமில்லை என்று கூறுவது. எப்போதாவது என்றால் பெரிய தாக்கம் ஏதும் இருக்காது. வேலை மட்டுமே கண்ணாக இருந்துக் கொண்டு, எப்போது அழைத்தாலும் நேரமில்லை என்று தட்டி கழிப்பது, உறவை கண்டிப்பாக சிதைக்கும்.
செயல் # 6
ஒருவர் உணர்வை மற்றொருவர் உணர்ந்துக் கொள்ளாமல், தன் சூழல் மட்டும் சுட்டிக்காட்டி தப்பித்துக் கொள்ள நினைப்பது. அவரது மனநிலையை சற்றும் புரிந்துக் கொள்ளாமல் நடந்துக்கொள்வது, ஓர் நாள் உங்கள் உறவை நிச்சயம் கொல்லும்.