Home ஆண்கள் உங்கள் ஆண்குறி சிறியதா? கவலையை விடுங்க…!!

உங்கள் ஆண்குறி சிறியதா? கவலையை விடுங்க…!!

36

01 (1)செக்ஸ் தொடர்பான பிரச்சினைகள் குவிந்து கிடக்கிறது. இங்கென்று, அங்கென்று இல்லை. எந்த நாட்டுக்குப் போனாலும், யாரைக் கேட்டாலும் ஏதாவது ஒரு பிரச்சினையை சொல்லத்தான் செய்கிறார்கள்.

பிரச்சினைகளைப் போலவே செக்ஸ் தொடர்பான சந்தேகங்களும் ஏராளம், ஏராளம். நிறைய பேருக்கு இதுகுறித்து மனப் புழுக்கம், தாழ்வு மனப்பான்மை, வருத்தம், கவலை இருக்கும். அப்படிப்பட்ட சந்தேகங்களில் ஒன்றுதான் ஆண் குறியின் அளவு சம்பநத்ப்பட்டது.

இளம் வயது ஆண்களிடம் குறிப்பாக டீன் ஏஜ் இளைஞர்களிடம் இந்த சைஸ் பிரச்சினை பெரும் கவலையாகவே இருப்பதைக் காண முடியும். எனக்கு ஆண்குறி மிகவும் சிறியதாக இருக்கிறது. இதனால் என்னால் இயல்பான செக்ஸ் உறவை மேற்கொள்ள முடியுமா என்பதில் சந்தேகமாக உள்ளது. சைஸ் பெரிதாக இருந்தால்தான் அதிக இன்பம் அனுபவிக்க முடியும் என்கிறார்கள். ஆண் குறி பெரிதாக இருந்தால்தான் மாவீரன் என்று பெண்கள் பாராட்டுவார்கள் என சக நண்பர்கள் கூறுகிறார்கள் என்று விசனப்படுபவர்கள் நிறையப் பேர் உள்ளனர்.

ஆனால், உங்களுக்கு சிறிய ஆண் குறியா, கவலையே படாதீங்க, நீங்க மிகவும் அதிர்ஷ்டமானவர் என்கிறார்கள் டாக்டர்கள். எப்படி..?

பெரிய ஆண்குறியை விட சிறிய ஆண்குறிகளுக்குத்தான் செக்ஸ் எழுச்சி அதிகமாக இருக்குமாம். ஆண் குறி எந்த சைஸில் இருக்கிறது என்பது முக்கியமில்லை. எழுச்சி எப்படி உள்ளது என்பதில்தான் இன்பத்தின் அளவை நாம் மதிப்பிட முடியும். ஆண் குறி பெரிதாக இருந்தால்தான் இன்பத்தின் அளவு அதிமாக இருக்கும் என்பது தவறு.

பெண்ணுறுப்பானது எந்த வகையான ஆண் குறியையும் அனுமதிக்கக் கூடிய அளவிலான எலாஸ்டிக்தன்மை கொண்டதே. அதற்கு சிறிதா, பெரிதா என்ற கணக்கெல்லாம் கிடையாது. எனவே ஆண் குறி சிறிதாக இருந்தால் எதையும் செய்ய முடியாது என்பது மூட நம்பிக்கையே தவிர வேறு எதுவும் இல்லை.

எனவே சைஸை நினைத்து புழுங்குவதோ அல்லது தாழ்வு மனப்பான்மை கொள்வதோ அவசியமே இல்லாத ஒன்று.

இப்படிப்பட்டவர்கள் கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்ற பழமொழியை நினைத்துக் கொண்டால் போதும், கவலையேல்லாம் போயே போய் விடும்