வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, சரும அரிப்பு, எரிச்சல், அசிங்கமான சொரசொரப்பான சருமம் என்று இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த வகை சருமத்தினருக்கு பொடுகுத் தொல்லை, சுவாசக் கோளாறு, வயிற்றுப் பிரச்சனைகள் போன்றவை இருக்கும். அதிலும் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு, ஒருசில இடங்களான மூக்கைச் சுற்றி, வாயைச் சுற்றி வறட்சி ஏற்பட்டு, தோல் உரிய ஆரம்பிக்கும்.
இவற்றைத் தவிர்க்க ஒருசிலவற்றை அன்றாடம் பின்பற்றி வந்தால், நிச்சயம் வறட்சியைத் தவிர்க்கலாம். இப்போது மூக்கைச் சுற்றி வறட்சி ஏற்படுவதைத் தவிர்க்க சில வழிகளைப் பற்றி பார்ப்போம்.
* மூக்கைச் சுற்றி வரும் வறட்சியை நீக்க, பெட்ரோலியம் ஜெல்லியை தடவ வேண்டும். தினமும் இரவில் படுக்கும் முன், தடவி வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
* சருமத்தின் வெளிப்புறத்தில் அழகு சாதனப் பொருட்களைக் கொண்டு பராமரித்தால் மட்டும் போதாது. உட்புற பராமரிப்பும் தேவை. அதற்கு தினமும் குடிக்கும் தண்ணீரின் அளவை அதிகரிக்க வேண்டும்.
* வறட்சி அதிகமானால் அரிப்பும், வலியும் அதிகமாகும். ஆகவே வறட்சியான சருமம் உள்ளவர்கள், பாதாம் எண்ணெயை கற்றாழை ஜெல்லுடன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், வறட்சி நீங்கும்.
* தூசிகளும், அழுக்குகளும் முகத்தை பொலிவிழந்து வெளிக்காட்டும். இப்படி பொலிவிழந்து காணப்படும் சருமத்தை தினமும் ஸ்கரப் செய்யாவிட்டால், இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் வளைவுகள் உள்ள இடங்களில் தங்கி, நிலைமையை மோசடையச் செய்யும். எனவே எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரையை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். மேலும் இந்த செயலை வாரம் 2 முறை செய்து வர வேண்டும்.
* மூக்கைச் சுற்றி வரும் வறட்சியைத் தவிர்க்க, பால், தயிர் மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு மாஸ்க் தயாரித்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் ஈரப்பசை தக்க வைக்கப்படும்.
* முட்டையின் மஞ்சள் கருவுடன், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து, அதனை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதன் மூலமும் வறட்சியைத் தடுக்கலாம்.
* கவனம் தேவை வெளியே வெயிலில் செல்லும் போது, தவறாமல் சன் ஸ்க்ரீன் தடவ வேண்டும். அதற்கு சன் ஸ்க்ரீன் வாங்கும் முன், அதில் ஆல்கஹால் உள்ளதா என கவனிக்க வேண்டும். அதில் ஆல்கஹால் இருந்தால், அவற்றை வாங்க கூடாது. ஏனெனில் இது நிலைமையை இன்னும் மோசமாக்கத் தான் செய்யும். கற்றாழை அல்லது ஆலிவ் ஆயில் உள்ள சன் ஸ்க்ரீன் லோசனை தடவுங்கள்.