Home பாலியல் உங்களுக்கு திருமணத்திற்கு முன்பு செக்ஸ் தேவைதான் என்பதற்கு வலுவான காரணங்கள்

உங்களுக்கு திருமணத்திற்கு முன்பு செக்ஸ் தேவைதான் என்பதற்கு வலுவான காரணங்கள்

62

thumbnail (5)திருமணத்திற்கு முன்பு செக்ஸ் என்ற கோட்பாடு என்பது வரைமுறையற்ற செக்ஸ் உறவுகளுக்கு வழி வகுத்து விடும் என்று அஞ்சப்பட்டாலும் அது தேவைதான் என்பதற்கு வலுவான காரணங்கள் உள்ளன.

1. ஆணும் பெண்ணும் கிட்டத்தட்ட 15 வயதில், உடல் ரீதியாக செக்ஸ் உறவுக்கு தயாராகி விடுகிறார்கள். வயது ஏற ஏற, Biological ஆகவே, உடலிலும் மனத்திலும் செக்ஸ் தேவை அதிகரிக்கும். நடைமுறை வாழ்க்கையில் கல்யாணத்துக்குப் பின்னரே செக்ஸ் என்ற சமூக கட்டாயத்தில் மனிதன் தன்னை வருத்திக் கொண்டு வாழ நேரிடுகிறது.

அதுவும் கல்யாண காலமும் வயதும் தள்ளிப் போகும் ஒரு சமூக சூழலில் 30, 35 வயது வரை ஆணும் பெண்ணும் செக்ஸ் உணர்வு தரும் துன்பத்தை அனுபவிக்க நேரிடுகிறது. தைரியமும் பணமும் உள்ள சிலரைத் தவிர, பலர் இதற்கு ஆளாக நேரிடுகிறது. செக்ஸ் உணர்வு தீராத காரணத்தினால் ஆண் பெண் இருபாலரும், சிந்திக்கவும் செயல்படவும் சாதிக்கவும் வாய்ப்புள்ள பலர், கவனமின்றியும் சிரத்தையின்றியும் அவர்களிடம் உள்ள திறமையை வெளி கொணரமுடியாமலேயே போய் விடுகிறது.

2. கல்யாணத்துக்கு முந்தைய செக்ஸ்க்கு வாய்ப்பிருக்கும் தருணத்தில், பருவ வயதில் உள்ள ஆணும் பெண்ணும், செக்ஸ் இல்லா துன்பத்தில் இருந்து விடுபட்டு, தங்களுடைய உழைப்பு சக்தி அனைத்தையும் ஒரு முகப்படுத்தி தான் விரும்பும் துறையில் முன்னேறவும், சாதனைகள் படைக்கவும் முடியும். தீராத செக்ஸ் உணர்வு, மனிதனை துன்பப்படுத்தும். தீர்ந்து விட்டாலோ, ஒரு மனிதனை ஆக்க சக்தியாக செயல்பட வைக்கும். மணவாழ்க்கையிலேயே, மனைவியை நீண்ட நாட்கள் பிரிந்திருக்கும் கணவர்கள்/மனைவிகள் செக்ஸ் உணர்வு உந்தப்பட்ட நிலையில், தங்கள் செயல்களில் உற்சாகம் குன்றி கவனமின்றி இருப்பதை ஒத்துக் கொள்வர்.

3. மணவயது அதீதமாக 30, 35 என்று திருமணம் தள்ளிப் போகும். பொருளாதார சூழல், TV யில் எந்நேரமும் செக்ஸ் உணர்வை தூண்டும் சினிமா/பாடல் காட்சிகள் ஆகியவை கல்யாணத்துக்கு முந்தைய செக்ஸின் தேவைக்கு நியாயங்கள் ஆகும்.30, 35 வயது என்பது இயற்கைக்கு முரணானது. கல்யாணம் வரை, செக்ஸ் உணர்வை அடக்கி வைப்பதும் இயற்கைக்கு முரணானது. இயற்கையோடு இயைந்து பருவம் வந்ததும் துணையை தேடி சோர்ந்து இருக்கலும் அல்லது பொருளாதார சிக்கலால் 30, 35 ல் கல்யாணம் என்றால் கல்யாணத்துக்கு முன் செக்ஸ் கிடைக்கலும். ஏதாவது ஒன்றுதான் தீர்வாக முடியும்.

4. செக்ஸ்க்காகத்தான் திமணம் என்பது கொச்சையாக இருக்கும். செக்ஸ்தான் திருமணத்தின் பிரதான அம்சம் என்பதே நிதர்சனம். செக்ஸ்க்காக மட்டுமே திருமணம் என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவு அபத்தம் திருமணம் இல்லாட்டி செக்ஸ் கிடையாது என்பதும்.

5. செக்ஸ் புதிரும் இல்லை. புனிதமும் இல்லை என்ற நிலை வரணும். Indians should come out of secrecy of sex என்று யாரோ சொன்னதாக சொல்வார்கள். 15 வயது பையனில் இருந்து 80 வயது கிழடு வரை செக்ஸ் ஒரு பெரிய மர்மம்தான். இது (இந்த கருத்து விகாரம்) உடையலும், பசி, தூக்கம், கோபம் போன்ற ஓர் உணர்வே செக்ஸ் என்ற “மன விடுதலை’ ஏற்பட்டு, ஆரோக்கிய சமூகம் உண்டாக திருமணத்திற்கு முன் செக்ஸ் என்பது ஒரு சாதாரண விஷயமாக வேண்டும்.

6. திருட்டு, கொலை, கொள்ளை ஆகியவை குற்றங்கள்(Crime). பருவ வயதில் ஆண் பெண் செக்ஸ் கொள்வது பசி தூக்கம் போன்ற ஒரு செயல். ஆனால் அது Crime ஆக பார்க்கப்படுவது தவறு. சமூக ஒழுக்கத்தையும் செக்ஸ் விஷயத்தையும் முடிச்சு போடும் மனோபாவம் மாற, திருமணத்துக்கு முன் செக்ஸ் என்ற மனநிலை கொண்ட சமூகத்தால்தான் முடியும். (இங்கு Rape என்பதை போட்டு குழப்பிக் கொள்ள கூடாது. அது Crime).

7. திருமணத்துக்கு முன் செக்ஸ் என்பதில் கல்யாணமாகாத (கன்னிப்) பெண், (கன்னி) ஆணை புணர்தல் என்று மட்டும் பொருள் கொள்ளக் கூடாது. திருமணத்துக்கு முன் ஆணும் பெண்ணும், எங்கு செக்ஸ் கிடைக்கிறதோ அங்கு பெறுதல் என்ற அளவில் புரிந்து கொள்ள வேண்டும். (Example : Brothal House).

8. திருமணத்திற்கு முன் செக்ஸ் என்ற கருத்து மனரீதியாக ஏற்கப்பட்டு, அதில் உள்ள “புனிதம்’ உடைக்கப்பட்டு விட்டால், அனேகமாக சமூகத்தில் “கற்பழிப்பு’ என்ற நிகழ்வே இல்லாமல் போய் விடும். கற்பழிப்பு என்ற பலாத்காரம் செக்ஸ் என்ற உணர்வுக்கு உணவு போடாததால் உண்டாகும் பின் விளைவு ஆகும்.

9. காமம் தீர்ந்த மனித குலமே நிம்மதியாக வாழும். மறைக்க மறைக்க, எட்டாக் கனியா இருக்க இருக்க, மர்மம் கூட கூட, துன்பமே விளையும்.

10. மேலே நாடுகளின் முன்னேற்றத்துக்கு, Sex Secrecy இல்லாத/ செக்ஸ் உடன் Sanctity (புனிதம்) சேர்க்காத அந்த சமூக அமைப்பு கூட காரணமாக இருக்கலாம்.

இன்று வளரும் இளம் தலைமுறையினர் மிகுந்த அறிவுத்திறனும்; தொலைநோக்கு சிந்தனையும்; தனக்கென சமுதாயத்தில் உள்ள மதிப்பையும் நன்கு அறிந்தவர்களாக இருக்கின்றனர். அப்படிப்பட்ட இளைஞர்களுக்க பெற்றோராகிய நாம்; ஆசிரியர்கள்; குடும்பப் பெரியோர்கள்; சமுதாயத் தலைவர்கள்; அரசியல்வாதிகள் ஆகயோர்களாகிய நாம் கற்றுக் கொடுக்கக் கூடிய செய்திகள் எவ்வளவோ இரக்கின்றது. அதில் ஒன்றுதான் “செக்ஸ்’. ஆனால் துரதிஷ்டவசமாக செக்ஸ் பற்றிய கருத்துக் கிளம்பும்போதெல்லாம் நாம் அனைவரும் மௌனமாகிவிடுகிறோம் அல்லது எதிர்ப்பு தெரிவித்து விடுகிறோம்.

காரணம், அது தெரிய வேண்டிய நேரத்தில் அவர்களுக்கு தானாகவே தெரிந்து விடும்; அவர்களை ஏன் நாம் குழப்ப வேண்டும் என்ற சாக்கை சொல்லி தப்பித்து விடுகிறோம். விளைவு இளைஞர்களுக்கு அதுபற்றிய ஆவல் இன்னும் அதிகமாகி தவறான செய்தியை படித்து; தவறான காட்சியை பார்த்து அவர்களுடைய இளமை சீரழிவதற்கு வாய்ப்பாக அமைந்து விடுகிறது. எனவே “செக்ஸ் என்று வாழ்வில் நடக்கக்கூடிய ஓர் உன்னத உணர்வு என்பதை அவர்களிடம் எடுத்துக்கூற வேண்டும்; பெற்றோர் தன் மகனை நன்றாக படிக்கச் சொல்கிறார், தவறான நண்பர்களுடன் சேரக்கூடாது என்கிறார். அதுபோல செக்ஸ் பற்றியும் “தேவை’யான நேரத்தில் வெளிப்படையாக பேச வேண்டும். செக்ஸ் என்பது மனிதர்களின் மற்ற தேவையைபோல், மற்ற உணர்வைபோல் ஓர் உணர்வே என்பதை எடுத்துக்கூற வேண்டும். மற்றபடி திருமணத்திற்கு முன் “செக்ஸ்’சா அல்லது பின்பு செக்ஸா என்பது என்பதை அந்தந்த தனிப்பட்ட மனிதன் விருப்பு வெறுப்பை சார்ந்ததே!