Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

உங்களால் ஏன் தொப்பையைக் குறைக்க முடியவில்லை என்று தெரியுமா?

22

01-1448962313-3-feeling-tired-while-exerciseபலருக்கும் பெருந்தொந்தரவைத் தரும் ஒன்று தான் தொப்பை. இது ஆண்கள், பெண்கள் என இருபாலரையும் பாடாய் படுத்துகிறது. இன்றைய காலத்தில் ஒவ்வொருவரும் இந்த தொப்பை மட்டும் எங்கிருந்து தான் வருகிறது என்பதற்கான காரணங்களையும், அந்த தொப்பையை எப்படி கரைப்பது என்பதையும் தேடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். நமக்கு தொப்பை வருவதற்கு நமது பழக்கவழக்கங்கள் தான் காரணம்.

இந்த கட்டுரையில் தொப்பையை உருவாக்கும் அந்த செயல்கள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றைத் தவிர்த்து வந்தால், நிச்சயம் உங்கள் வயிற்றில் தேங்கும் கொழுப்புக்களைக் குறைக்கலாம். சரி, இப்போது தொப்பையை உருவாக்கும் விஷயங்கள் என்னவென்று பார்ப்போமா!

ஜங்க் உணவுகளை அதிகம் உட்கொள்வது
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததோடு, அதில் கெட்ட கலோரிகள் ஏராளமாக நிறைந்துள்ளது. இதனால் அவற்றை உண்ணும் போது அவை தொப்பை உருவாக்குகிறது. இக்காலத்தில் எங்கும் ஃபாஸ்ட் ஃபுட் உணவகங்கள் அதிகம் உள்ளதால், மக்களுள் பெரும்பாலானோரை அங்கு காணலாம். ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளில் உள்ள சுவையூட்டிகள், மக்களை அதன் சுவைக்கு அடிமைப்படுத்தி, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளின் மீதான நாட்டத்தைக் குறைத்துவிடுகிறது. இதனால் பழங்கள் மற்றும் வீட்டில் சமைத்த ஆரோக்கியமான உணவுகளை மக்கள் மறந்து, ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் நாடுகிறார்கள். மேலும் இதற்கு பரிசாக தொப்பையைப் பெறுகிறார்கள்.

நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்ப்பது
உடலில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரிக்கிறோமோ, கெட்ட கொழுப்புக்களின் அளவு குறையும். இந்த நல்ல கொழுப்புக்கள் சால்மன் மீன், அவகேடோ, ஆலிவ் ஆயில், வால்நட்ஸ், சூரியகாந்தி விதைகள் போன்றவற்றில் அதிகம் உள்ளது. ஆனால் இந்த உணவுகளை பலரும் தங்களின் உணவில் அதிகம் சேர்ப்பதில்லை. இதன் காரணமாக ஒவ்வொருவரும் தொப்பைப் பெறுகின்றனர்.

தவறான உடற்பயிற்சி
உடற்பயிற்சி செய்தால் தொப்பை குறையும் என்று கண்ட உடற்பயிற்சிகளை செய்தால் தொப்பை குறையாது. ஒவ்வொருவரும் தொப்பையைக் குறைப்பதற்கு எந்த வகையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தொப்பையைக் குறைப்பதற்கு கார்டியோ பயிற்சிகள் மற்றும் வெயிட் ட்ரெயினிங் தான் சிறந்தது. இவற்றை செய்யும் போது கலோரிகள் அதிகம் குறைத்து, தசைகளின் வலிமை அதிகரிக்கும்.

வயதும் ஓர் காரணம்
வயது அதிகரிக்க அதிகரிக்க உடலின் மெட்டபாலிச அளவு குறையும். இதனால் கொழுப்புக்கள் கரைவது குறைக்கப்படும். எனவே வயது அதிகரிக்கும் போது நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளான ஓட்ஸ், முழு கோதுமை, பழங்கள் போன்றவற்றை உட்கொள்ளுங்கள். அதோடு உடற்பயிற்சியிலும் ஈடுபடுங்கள்.

மன அழுத்தத்தில் இருப்பது
மன அழுத்தமும் தொப்பை வருவதற்கு ஓர் காரணம். அளவுக்கு அதிகமான வேலைப்பளுவினால் அல்லது மன கஷ்டத்தினால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, உடலின் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகமாக உற்பத்தி செய்யப்படும். இந்த ஹார்மோன் உடலில் கொழுப்புக்களின் தேக்கத்தை அதிகரிக்கும். இதனால் தொப்பை வர ஆரம்பிக்கும். எனவே தினமும் மன அழுத்தத்தைக் குறைக்க தியானம், யோகா போன்றவற்றை செய்து வாருங்கள்.

தூக்கமின்மை
நீங்கள் ஒரு நாளைக்கு 8 மணிநேரத்திற்கும் குறைவான அளவில் தூக்கத்தை மேற்கொண்டால், உடல் ஒருவித அழுத்தத்திற்கு உள்ளாகும். அதுமட்டுமின்றி, இனிப்பு மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளின் மீது நாட்டம் அதிகரிக்கும். இப்படி மன அழுத்தத்துடன் கண்ட உணவுகளின் மீது நாட்டம் அதிகரித்து உட்கொண்டால், அதன் காரணமாக தொப்பை வரக்கூடும். எனவே தொப்பை குறைய வேண்டுமெனில், நல்ல தூக்கத்தை முதலில் மேற்கொள்ளுங்கள்.

ஹார்மோன் பிரச்சனைகள்
உங்களுக்கு ஹார்மோன் பிரச்சனைகளான ஹைப்போ தைராய்டு, கருப்பையில் கட்டிகள் போன்றவை இருந்தால், தொப்பை வரக்கூடும். எனவே இப்பிரச்சனைகளைக் கொண்டவர்கள், மருத்துவரை சந்தித்து முறையான சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.