Home சமையல் குறிப்புகள் ஈசி மெக்ஸிகன் ரைஸ்

ஈசி மெக்ஸிகன் ரைஸ்

23

என்னென்ன தேவை?

பெரிய ராஜ்மா – கால் கப்,
பொடியாக நறுக்கி, வேக வைத்த கேரட், பீன்ஸ், பட்டாணி – கால் கப்,
பாஸ்மதி அரிசி – 1 கப்,
நறுக்கிய பெரிய வெங்காயம் – 1 கப்,
பூண்டு விழுது – 1 டேபிள்ஸ்பூன்,
சில்லி ஃபிளேக்ஸ் – 1 டேபிள்ஸ்பூன்,
மிளகாய் தூள் – 1/4 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்.
எப்படிச் செய்வது?

ராஜ்மாவை 6 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். பாஸ்மதி அரிசியை உதிராக வேக வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, வெங்காயம், பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். சில்லி ஃபிளேக்ஸ், வேக வைத்த ராஜ்மா, காய்கறிகளைப் போடவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள் உப்புச் சேர்த்து சுருள வதக்கவும். இறுதியாக சாதத்தை சேர்த்து கிளறி சூடாகப் பரிமாறவும். பாசுமதிக்கு பதில் சிறுதானிய அரிசியும் பயன்படுத்தலாம்.