அமெரிக்காவில் இளைய தலைமுறையினரிடம் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ளும் ஆர்வம், கடந்த 25 ஆண்டுகளில் குறைந்து வருவது ஒரு சர்வேயில் தெரிய வந்துள்ளது.
2011-2013 இடையே, 15-19 வயது பிரிவினரில் 44 சதவீதம் பெண்கள், 47 சதவீதம் ஆண்கள் செக்ஸ் உறவு கொண்டுள்ளதாக கூறி உள்ளனர்.
1988-ம் ஆண்டு, இதே வயது பிரிவில் 51 சதவீத பெண்கள், 60 சதவீத ஆண்கள் செக்ஸ் உறவு வைத்துள்ளனர்.
அதே நேரத்தில் பாதுகாப்பான செக்ஸ் உறவு கொள்கிறவர்களின் எண்ணிக்கை சற்றே அதிகரித்துள்ளதும் இந்த சர்வேயில் தெரிய வந்துள்ளது.
2002-ம் ஆண்டு, 94 சதவீத இளம்பெண்கள் ஒரு முறையாவது கருத்தடை சாதனம் பயன்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டதாக கூறி உள்ளனர்.
2011-13 ஆண்டுகளில் 97 சதவீத இளம்பெண்கள், கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தி செக்ஸ் உறவு வைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இளம் வயதில் முதல் முறையாக செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள விரும்புகிற இளைய தலைமுறையினர் கருத்தடை சாதனங்கள் பயன்படுத்தி பாதுகாப்பாக இருந்து கொள்ளவே விரும்புகின்றனர்.