Home பாலியல் இளைஞர்களே பாலியல் குறைபாடா இதை விடுங்க, எதை?

இளைஞர்களே பாலியல் குறைபாடா இதை விடுங்க, எதை?

30

1443080540-4449வெளியே சொல்ல முடியாத பிரச்சனை ஆனால் இது தான் எனக்கு முக்கியமான பிரச்சனை, அதுதாங்க பாலியல் பிரச்சனை. விதவிதமாக முயற்சி செய்து பாத்துட்டேன் ஆனால் எதுவும் முடியலனு கவலையா, அத விடுங்க இந்த பிரச்சனைக்கு சில மூலக்காரணம் இருக்கு அது என்னனு முதல்ல தெரிந்துகொள்வோம்.

கிராமத்துல வாழும் உழைப்பாளர்கள் நாலு அஞ்சுன்னு பெத்துக்கிராங்க ஆனால் நகரத்துல வாழ்றவங்களுக்கு அது ஏன் முடியல? காரணம் கிராமமோ நகரமோ இல்லை. இப்போதுள்ள பெரும்பாலான இளைஞர்கள் புகைப்பழக்கம், புகையிலை, போதை பழக்கம் தவறான உணவு முறையால் மனஅழுத்தம், உடல் உஷ்ணம், வாயுத்தொல்லை போன்றவற்றால் பாதிக்கப்பட்டு நரம்புத்தளர்ச்சி பாலியல் குறைபாடுகளுக்கு ஆளாகிறார்கள்.

* புகைப்பழக்கம் அதிகமானால் இரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டு பாலியல் குறைபாடுகளை ஏற்படுத்தும்.

* மதுப்பழக்கத்தால் மூளையின் செயல் திறன் குறைந்து, தண்டுவடம், நரம்புமண்டலம் பாதிக்கப்பட்டு நாளடவில் அது பாலியல் குறைபாட்டில் முடியும்.

* மதுப்பழக்கத்தால் பாலுணர்வு அதிகரிக்கும்னு சொல்லுவாங்க, இது தவறான கருத்து. மதுப்பழக்கத்தால் வெறி தான் அதிகரிக்கும்.

* உடல் உஷ்ணத்தினால் பாலியல் குறைபாடு ஏற்படும், உடல் சூடு அதிகம் உள்ளவர்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகமாக இருக்கும் ஆனால் செயல்பாடுகள் பலவீனமாக இருக்கும்.

* உடல் உஷ்ணம் அதிகரித்தால், சில நிமிடங்களிலே உடலுறவில் ஈடுபடமுடியும். இதில் விந்துவின் பலம் குறைந்து, விந்து உயரணுக்களின் எண்ணிக்கை குறையும் இதைத்தான் ஆண்மைக்குறைவு என்கிறோம்.

* உடல் உஷ்ணம் பெண்களின் மாதவிடாய் சூழற்சியை பாதிக்கிறது. இதனால் உடலுறவில் ஆர்வம் குறையும், அதிக வெள்ளைபடுதல் ஏற்படும். இடுப்பு, முதுகு வலி, தளர்ச்சி ஏற்படும்.

* வீடுகளில் ஏற்படும் சண்டைகள், பொற்றோர்கள், உடன் பிறந்தோர் ஒற்றுமையின்மை போன்ற பல்வேறு காரணங்கள் ஆழ்மனதை பாதித்து நரம்புத்தளர்ச்சிக்கான காரணமாகி பாலியல் பிரச்சனைக்கு வழி வகுக்கும்.

* காரம், புளிப்பு முதலியவற்றை உணவில் மிக அதிக அளவு சேர்த்துக் கொள்ளுவது, இரவில் தேவைக்கு அதிகமாக உணவு உட்கொள்ளுதல் போன்றவையும் நரம்பு தளர்ச்சிக்கு காரணமாக அமையும்.