தாம்பத்திய உறவின் பொழுது, ஆண்குறியில் விறைப்புத்தன்மை இரண்டு நிமிடங்களுக்கு மேலாக தக்கவைக்க முடியாத பொழுதில், மிகவும் விரைவாகவே விந்து வெளியேறிவிடுகின்றது. விரைவில் விந்து வெளிப்படுதலால் ஏற்படும் பாதகமான விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வேறுபாடாக காணப்படுகிறது. ஆனால் இது திருப்தியற்ற, நிறைவு பெறாத தாம்பத்திய உறவு, கணவன் மனைவிக்கிடையே உறவில் சுமையை ஏற்றுவுதோடு, கணவனுக்கு ஆண்மையிலுள்ள நம்பிக்கையை மிகவும் பலவீனப்படுத்துகிறது. ஆண்களில் பலர், தாம்பத்திய உறவின் போது ஆரம்பத்திலேயேவிந்து வெளிப்பட்டுவிடுமானால் மிகவும் எரிச்சலடைகிறார்கள். இந்நேரத்தில்இருவருக்குமே திருப்திகிடைப்பதில்லை.
விரைவில்விந்து வெளிப்படுதல் நிலை தீவிரமாக இருக்கும் சில ஆண்களுக்கு பெண்ணுடன்உடலுறவு தொடங்க முன்பதாகவே விந்து வெளிப்பட்டுவிடுகின்றது. ஆரோக்கியமான, காமக் கிளர்ச்சியுள்ள தம்பதியினர் ஒருவருக்கொருவர் திருப்தியாக இன்பமளிக்கும் உறவைப் பேணி வாழ்வது முக்கியமானதாகும். இப்படியாக இருக்கவேண்டியதொரு உறவில் விரைவில் விந்துவெளிப்படுதல் நிலையானது உடல், உள நிலைப்பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது. இன்றைய நாட்களில் விரைவில் விந்து வெளிப்படுதல்நிலையானது ஆண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் பெரியதொன்றாகும். இதனால் குழந்தை பிறப்பதில் தற்போது சிக்கல் நிலை தோன்றியுள்ளது. இந்நிலையில் ஆண்கள் 18 வயதில் தங்கள் விந்துகளை, குளிர்சாதன பெட்டியில் பாதுகாக்கும் முக்கியத்துவம் பற்றி பிரிட்டிஷ் ஏபேர்ன் பல்கலைக்கழகம்டொக்டர் கெவின் ஸ்மித் கூறுகிறார். இளம் வயது விந்தானது மிகவும் பலம் மிக்கது. எனவே அவற்றை சேமிப்பது மிகவும் பிரயோசனமான ஒன்றாகும். பின்னர் அதனை பயன்படுத்தி பிள்ளையை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார் அவர்.