இன்றைய காலத்தில் சிறுமிகள் 11-14 வயதில் பருவம் அடைகின்றனர். இது 9-15 வயது வரையிலும் கூட மாறுபடுகின்றது. இதுவே சிறுமி பெண்ணாகும் காலமாக குறிக்கப்படுகின்றது.
இக்காலகட்டத்தில் சிறுமியின் உடலில் பல மாறுதல்கள் ஏற்படுகின்றன. பருவம் எய்துவது அப்பெண்ணின் மனநிலை, சூழ்நிலை கொண்டு சற்று சீக்கிரமாகவே நிகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.
அதற்கான காரணங்கள்:-
* குழந்தையிலிருந்தே குண்டாயிருத்தல்
* அப்பா அருகில் இல்லாமல் வளரும் குழந்தை பருவம்
* குடும்பத்தில் உறவினர்களிடையே மோதல்
* பிறக்கும் பொழுதே மிகக் குறைந்த எடை
* அதிகம் சிகரெட் புகை சூழலில் வளர்ந்தவர்கள்
* தாய் பால் போதுமான காலம் பெறாத குழந்தை
* ஓடி ஆடி விளையாடாத குழந்தை
முறையான காலத்தில் பருவம் எய்துபவர்களுக்கு ஆய்வுகள் கூறும் காரணங்கள்:-
* பெரிய குடும்பம்
* குடும்பத்தினரிடையே சுமூகமான உறவுகள்
நம் நாட்டில் பெண் பருவமடைவதை ‘மஞ்சள் நீராட்டு விழா’ என்று கொண்டாடுவதைப் போல் ஜப்பான் போன்ற வேறு சில நாடுகளிலும் பெண் பருவமடைவதை வீட்டு உறுப்பினர்கள் விழாவாகக் கொண்டாடுகின்றனர்