Home சூடான செய்திகள் இல்லறம் நன்றாக அமைய கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது!

இல்லறம் நன்றாக அமைய கணவரிடம் பெண்கள் எதிர்பார்ப்பது!

37

452065242valentine-couple-on-their-bedகணவன், மனைவி மத்தியில் போட்டிப் பொறமை துளியும் இருக்கக் கூடாது. காதல் மற்றும் அன்பு செலுத்துவதில் போட்டியைக் காட்டுவது கூட யாரேனும் ஒருவரை நாம் குறைவாக அன்பு செலுத்துகிறோமா என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்பட காரணமாக இருந்துவிடும். எனவே, இல்லறம் நல்லறமாக இருக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய கூடாது என முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்….

* கணவன், மனைவி உறவில் எதுவாக இருப்பினும் அதை ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இருத்தல் வேண்டும். இல்லையேல் உறவில் காயங்கள் ஏற்பட வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. உங்கள் துணையுடன் வீம்புக்கு செயல்படுவதால் எந்த பலனும் கிடையாது. எனவே, ஒப்புக்கொள்ளுங்கள், அது எவ்வளவு பெரிய தவறாக இருப்பினும் கூட, சூழ்நிலை அறிந்து எடுத்துக் கூறுங்கள்.

* ஒப்புக்கொள்ளும் மனப்பான்மை இல்லாமல் இருத்தல், காலப்போக்கில், வன்மம் மற்றும் பழிவாங்கும் குணத்தை அதிகரிக்கும் கருவியாக மாறிவிடும். இதனால் உங்கள் உறவில் விரிசல் ஏற்படலாம்.