Home பாலியல் இல்லறத்தில் பெண்கள் நாட்டமில்லாமல் இருப்பதை வெளிகாட்டும் 10 அறிகுறிகள்!

இல்லறத்தில் பெண்கள் நாட்டமில்லாமல் இருப்பதை வெளிகாட்டும் 10 அறிகுறிகள்!

34

29-1456729856-4signsofanunhappymarriedwoman-585x439பெண்கள் பொறுமை சாலிகள் தான். ஆனால், அவர்கள் பொறுமையிழக்கும் போது, சாது மிரண்டால் காடு தாங்காது என்பது போல இருக்கும். மேலும், இன்றைய தலைமுறையில் பெண்கள் பொறுமைக் காக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இல்லை.
கணவன் தான் தன் வாழ்வாதாரம் என்ற நிலையைவிட்டு பெண்கள் வெளியேறி பல நாட்கள் ஆகிவிட்டன. இருவரும் வேலைக்கு செல்கிறார்கள், இருவரும் குடும்பத்தை நடத்துகிறார்கள். இந்நிலையில் தான் குடும்பத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் கூட விஸ்வரூபம் எடுக்கின்றன.
ஆண், பெண் இருவருக்கும் இல்லறத்தில் கோபம் அதிகரிப்பதால் உறவில் விரிசல் அதிகரிக்க ஆரம்பிக்கின்றன….
பேசுவதை குறைத்துக் கொள்வது
கொஞ்சம், கொஞ்சமாக உங்களுடன் பேசுவதை குறைத்துக் கொள்வார்கள். நேரம் செலவழிப்பதும் குறைய தொடங்கும்.
காரணமின்றி கோவப்படுவது
காரணமின்றி அல்லது அளவிற்கு அதிகமாக கோபப்படுவார்கள். சின்ன சின்ன விஷயங்களை கூட பெரிதுப்படுத்தி சண்டையிடுவார்கள்.
சோர்வாக காணப்படுவது
எப்போதுமே சோர்வாக காணப்படுவார்கள். மகிழ்ச்சியான தருணங்களில் கூட தனியாக தான் இருப்பார்கள்.
உடலுறவிற்கு சம்மதம் இன்றி இருப்பது
உடலுறவில் ஈடுபடுவதிலும், தாம்பத்திய வாழ்க்கையிலும் உடன்பாடு இல்லாமல் இருப்பார்கள்.

விடயங்களை மறைப்பது
தங்களை சார்ந்த விடயங்களை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள மறுப்பது அல்லது உங்களிடம் மறைப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.
நம்பிக்கை இழப்பு
உங்கள் மீதான நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். இதன் காரணமாக கூட தன்னை பற்றிய விடயங்களை உங்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்பாமல் இருக்கலாம்.
கவனமின்மை
உங்கள் மீதும், நீங்கள் கூறும் கருத்துக்கள் அல்லது நீங்கள் அவருடன் உரையாடும் போது கவனமின்றியே காணப்படுவார்.
புதிய முயற்சிகள்
தனியாக செயல்பட ஆரம்பிப்பார்கள், தனித்து முயற்சிகள் செய்வார்கள். உங்கள் உதவி அல்லது ஆலோசனை நாடமாட்டார்கள்.
தன்னலம்
தன்னலத்தோடு செயல்பட துவங்குவார்கள். மற்றவர் நலன் பற்றி கவலைக் கொள்ளமாட்டார்கள். தனக்கு நல்லது என்று படுவதை மட்டும் செய்வார்கள்.
தோற்றத்தை மாற்றிக் கொள்வது
தன் இயல்பான தோற்றத்தில் இருந்து நிறைய மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வார்கள். தோற்றத்தை மாற்றிக் கொள்வது அவர் உங்களைவிட்டு பிரிய முடிவெடுத்துவிட்டார் என்பதை வெளிகாட்டும் அறிகுறியாகும்