Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன்? கொஞ்சம் இதை கவனியுங்க!...

இரவில் தூங்கும் போது திடீரென உடல் அதிர்ந்து விழிப்பு வருவது ஏன்? கொஞ்சம் இதை கவனியுங்க! பக்கத்தில் தூங்குறவங்கள பதற விட வேண்டாம்!

269

எனக்கும் இந்த நிகழ்வு குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை ஏற்படுகிறது. இதில் அதிகம் பாதிக்கப்படுவது நம் அருகில் தூங்குபவராக தான் இருக்கும். ஒரு முறை எனக்கு அருகில் அப்பா தூங்கிகொண்டிருந்த போது, இப்படி நடந்தது. திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தேன். “ஏதாவது கெட்ட கனவா” என்று கேட்டார். ஒன்னும் இல்லைபான்னு சொல்லிவிட்டு மீண்டும் படுத்தேன். சில நேரங்களில் வ லிப்பு வந்தது போல, திடீரென ஒரு துள்ளு துள்ளிவிடுவோம், இல்லையென்றால் எதையாவது பார்த்து மிரண்டது போல உடல் அதிரும்.

இது எதனால் வருகிறது? இதனை தடுக்க ஏதாவது வழி இருக்கா? என்பது குறித்து நண்பர்களிடம் கேட்டாலும் சரியான விளக்கம் கிடைக்கவில்லை. இப்போது அது பற்றி எனக்கு கொஞ்சம் தெரிய வந்திருக்கு. கல்லூரியில் விலங்கியல் படித்து என்னுடைய நண்பனின் தம்பி தெளிவாக விளக்கினார். மன அழுத்தத்தை கையாள்வதும்; சீரான தூக்கம் இல்லாததும் தான் இதற்கு முதல் காரணமாம். விழித்திருக்கும் நிலைக்கும், தூக்க நிலைக்கும் இடையேயான நேரத்தில் இந்த அதிர்வு உண்டாகும்.

நம்முடைய உடல் தூக்க நிலைக்கு செல்வதற்கு முன்னர், சுவாசம் மற்றும் இதயத் துடிப்பு குறைந்து, உடலின் வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும். எல்லா உறுப்புகளும் ஓய்வு நிலையை நோக்கி செல்ல ஆரம்பிக்கும். இயங்கி கொண்டிருந்த உடல், திடீரென இயக்கம் இல்லாத நிலைக்கு போகும் போது, நம்முடைய உடலின் நரம்பு மண்டலம் மூளைக்கு ஒரு சிக்னல் கொடுக்கும். எல்லா உறுப்புகளும் இயக்கத்தை குறைக்கும் போது, நரம்பு மண்டலம் குழம்பி போகும். உடலை மீண்டும் செயல்படுத்த சொல்லி மூளைக்கு எச்சரிக்கும்.

மூளைக்கு அந்த சிக்னல் சென்று, “உடல் தூக்க நிலையில் இருக்கிறது. வேறு எந்த அ சம்பாவிதமும் நடக்கவில்லை” என்பதை உணர்த்துவதற்குள், நரம்பு மண்டலம் உடலை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பார்க்கும். அதனால் தான் திடீரென உடல் அதிர்வு ஏற்படுகிறது. இது அடிக்கடி நிகழ மன அழுத்தம், பதற்றம், சோர்வு, காஃபின் அதிகம் கொண்ட பானங்கள் காரணமாகும். உடலையும், மனதையும் அடிக்கடி அலட்டிக்கொண்டால், இந்த உணர்வு அடிக்கடி வரும். முடிந்த வரையில், நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள பழகிக்கொண்டால், எதற்கும் பயப்படதேவையில்லை.