Home ஆரோக்கியம் இரத்த சோகை நீங்க பாட்டி வைத்தியம்

இரத்த சோகை நீங்க பாட்டி வைத்தியம்

26

blood-cells-600-300x1621. ஒரு கைப்பிடி முருங்கைக் கீரையுடன் 10 மிளகைச் சேர்த்து அரைத்து தொடர்ந்து 15 நாட்கள் சாப்பிட்டால் இரத்த சோகை முழுமையாகக் குணமாகும்.
2. கல்யாண முருங்கை இலை, முருங்கை இலை, மிளகு, பூண்டு ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த சோகை குணமாகும்.
3. பாலக் கீரையுடன் மிளகு, பூண்டு, மஞ்சள் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
இரத்த விருத்தி
பாற்சொரிக் கீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால் இரத்த விருத்தி உண்டாக்கும்.
இரத்தக் குறைவு
இரத்தக் குறைவால் சிலருக்கு மயக்கம் வருவதுண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணிக் கீரையைக் கொண்டு வந்து காய வைத்து இடித்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு, தினசரி காலை மாலை ஒரு ஸ்பூன் தேனில், ஒரு ஸ்பூன் பொடியைக் குழைத்துச் சாப்பிட்டு வரவும்.
இரத்த ஓட்டம்
தூதுவளைக் கீரையை பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் இரத்த ஓட்டம் சீராகும்