இரத்த அழுத்தத்திற்கு காரணம் என்னவென்று பலரிடம் கேட்டால், டக்கென்று உப்பு என்று தான் சொல்வார்கள். ஆனால் இதுவரை, இரத்த அழுத்தத்திற்கும் உப்பிற்கும் சம்பந்தம் இருப்பதாக எந்த ஒரு ஆய்வும் நிருபித்தது இல்லை.
உப்பு உடலில் இருக்கும் வரை இரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலை விட்டு போனபின் இரத்த அழுத்தமும் இறங்கிவிடும். ஆனால் உண்மையில், உப்பை கட் செய்தால் இரத்த அழுத்தம் ஒண்ணு, ரெண்டு பாயிண்ட் தான் குறையும்.
இரத்த அழுத்தம் வருவதற்கான காரணம் :
இரத்த அழுத்தம் வருவதற்கு முக்கிய காரணம் இன்சுலின்.
உதாரணமாக, 2 துண்டு பிரட், ஜாம், ஒரு ஆரஞ்சு ஜூஸ் குடிக்கும் போது, அதில் உப்பு சிறிதும் இல்லை. ஆனால், சர்க்கரை ஏராளமாக உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்கும்.
இன்சுலின் இரத்த அழுத்தத்தை மூன்று விதங்களில் உருவாக்குகிறது.
முதலாவதாக, இன்சுலின் சிறுநீரகத்திற்கு அதிக அளவில் சோடியத்தை தேக்க உத்தரவிடுகிறது. இதனால் தேவையற்ற சோடியத்தை சிறுநீரகம் வெளியேற்ற நினைத்தாலும் அதனால் முடிவது இல்லை.
சிறுநீரகத்தில் சோடியம் தேங்கினால் அதற்கு ஏற்ப உடலில் நீரும் தேங்கியே ஆக வேண்டும். ஆகவே உடலில் சோடியமும், நீரும் தேங்க நம் ரத்த அழுத்தம் வேகமாக அதிகரிக்கிறது.
இரண்டாவதாக, அதிகப்படியான இன்சுலின் நம் இதயகுழாய்கள் விரிவதை தடுக்கிறது. காரணம் இன்சுலின் ஒரு வளர்ச்சியளிக்கும் ஹார்மோன்.
இதயகுழாய்கள் விரிவது நின்றால் இதயம் அதிக வேகத்துடன் ரத்தத்தை பம்ப் செய்ய வேண்டும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது.
மூன்றாவதாக, இன்சுலின் நரம்பு மண்டலத்தில் கிளர்ச்சியை ஏற்படுத்தி கார்டிசோல் எனும் கெமிக்கலை சுரக்க வைக்கிறது. இது அட்ரினலின் போன்று அழுத்தம் அளிக்கும் திரவம்.
அதிகம் கோபப்பட்டாலோ அல்லது ஆவேசபட்டாலோ அட்ரினலின் சுரக்கும். கோபப்பட்டால் இதயம் அதிக ரத்தத்தை பம்ப் செய்ய தயாராகும். இதுவும் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும்.
ஆகவே, இரத்த அழுத்தத்தைக் குறைக்க வேண்டுமெனில் முதலில் நிறுத்த வேண்டியது உப்பை அல்ல. சர்க்கரை மற்றும் தானியத்தை தான்.
எனவே, தானியத்தையும், சர்க்கரையையும் ஒரு வாரம் உணவில் இருந்து குறைத்தால், இரத்த அழுத்தம் மட, மட என குறையும். மேலும் உப்பை எவ்வளவு தின்றாலும் அது சிறுநீரகத்தில் தேங்காமல் வெளியே வந்துவிடும்.