இயற்கை பொருட்கள் மூலம் நம் அழகை பராமரிக்கலாம்
அழகு குறிப்பு, சுகமாக வாழ
ஆரோக்கிய அழகுக் கலை
பாட்டி வைத்தியம்.
1. வெள்ளரிக்காய்ச் சாறு இயற்கையான பிளீச் ஆகும். வெள்ளரிக் காய் உடலுக்குக் குளுமை மட்டுமல்லை, முகத்திற்கு ஒளி தரக்கூடியது. மாசுமருவற்ற பளபளப்பான முகத்தைப் பெறத் தினமும் முகத்தில் வெள்ளரிக்காய் சாற்றைத் தடவுங்கள்.
2. 35 வயதிற்குப் பிறகு மாதம் ஒருமுறை ஃபேஷியல் செய்து வந்தால், முகத்தில் சுருக்கங்கள் தோன்றாமல், 50 வயதில் 30 வயதுப் பெண்மணிப்போல் தோற்றம் அளிப்பீர்கள்.
3. இரண்டு மாதத்திற்கு ஒருமுறை வாக்ஸிங் செய்வதால் முதலில் கை, கால்களில் உள்ள முடி குறைவாக வளரும். பின்பு நாளடைவில் வளர்வது நின்றுவிடும்.
4. தினமும் அரை மணி நேரம் செய்யும் உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தாட்சி.
5. ஒரு நாளைக்கு எட்டு டம்ளர் நீர் அருந்தினால், உடல் உள்ளுறுப்புகள் சுத்தமாகும், சருமம் மினுமினுக்கும்.
6. வேப்பமர இலைகளையும், புதினா இலைகளையும், துளசி இலைகளையும் கழுவி அரைத்து, முகத்தில் தடவினால் முகப்பரு மறையும்.
7. கரிகசலாங்கண்ணி, கறிவேப்பிலை, மருதாணி, செம்பருத்தி ஆகியவற்றை அரைத்து, காயவைத்து, தேங்காய் எண்ணையுடன் காய்ச்சி, பாட்டிலில் எடுத்து வைத்துக் கொள்ளவும். பிறகு அதை தலைமுடியில் தடவிவந்தால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.
8. உப்பு கலந்த நீரில் கால்களை 15 நிமிடம் நனையவைத்தால் கால்வலி குறையும். தளர்ச்சியான கால்கள் புத்துணர்ச்சி பெறும்.
9. சிகைக்காய் அரைக்கும்போது, கொஞ்சம் பாசிப்பருப்பு, வெந்தயம், பூந்திக்கொட்டை, பச்சரிசி, காயவைத்த செம்பருத்தி இலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து உபயோகித்தால் தலைமுடி பளபளப்பாக இருக்கும்; கருமையாகவும் வளரும்.