Home பெண்கள் தாய்மை நலம் இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன?

இயற்கையின் கருத்தடை சாதனம் என்ன?

19

488849290நான் இரண்டு நாட்களுக்கு முன்னால் தான் ஒரு ஆண் குழந்தை பெற்றேன். சுகப் பிரசவம் என்பதால், சட்டென்று சகஜ நிலைக்கு திரும்பி விட்டேன். நானும் என் கணவரும் தினமும் படுக்கை சுகம் அனுபவிப்போம், அதனால் உடனே அதற்கு தயாராகி விட்டோம். என்னைப் போல பச்சை உடம்புக் காரிகளுக்கு எந்த மாதிரி கருத்தடை சாதனம் சரியாக இருக்கும், சொல்லுங்களேன்? மருத்துவர் பதில்: உங்களைப் போல சமீபத்தில் தாயானவர்களுக்கு ஒரு இயற்கையான கருத்தடை சாதனம் இருக்கிறது. அது என்ன தெரியுமா, முலைப்பால் ஊட்டுவதுதான்! குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் ஊட்டினாலே, அது கருத்தடை சாதனமாக செயல்படும். இதற்கு ஆங்கிலத்தில் Lactational Amenorrhea Method (LAM) என்று கூறுகிறார்கள். இது விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்ட, கிட்டத்தட்ட 99% பயனளிக்கும். அதாவது நூற்றில் ஒரு பெண்ணுக்குத்தான், இந்த முறை பயனளிக்காமல் போகும். இந்த முறையான கருத்தடைக்கு நீங்கள் செய்ய/கவனிக்க வேண்டியவை:

1. இது குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு மட்டுமே பயனளிக்கும்.
2. குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே உணவாக இருக்க வேண்டும் (ருசிக்காக மற்ற திரவங்களை கொடுக்கலாம்)
3. தாய், குழந்தைக்கு முலை வழியே நேரடியாக பால் ஊட்ட வேண்டும். பம்ப் போன்ற பொருட்களை வைத்து பாலை உறிஞ்சி எடுக்கக் கூடாது.
4. பகல் நேரத்தில் குறைந்தது நான்கு மணி நேரங்களுக்கு ஒரு முறையும், இரவு நேரங்களில் ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறையும் பாலூட்ட வேண்டும்.
5. உங்கள் மாத விலக்கு வராமல் இருக்க வேண்டும். (முதல் இரண்டு மாதங்களுக்கு வரும் சொட்டு ரத்தம் போன்றவை கணக்கில் வராது) இந்தக் கருத்தடை முறையின் சிறப்புகள்:

1. எந்த விதமான பக்க விளைவுகளும் கிடையாது, இது இயற்கையின் கருத்தடை சாதனம் என்று சொல்லலாம். 2. எந்த செலவும் இல்லாதது.
3. உடலுறவுக்கு முன் எந்த விதமான செயல்பாடுகளும் தேவை இல்லை.
4. கிட்டத்தட்ட 99% பயனளிக்க வாய்ப்பு உள்ளது. இந்த முறையில் உள்ள பிரச்சனைகள்:
1. தாய் தொடர்ந்து இரவும் பகலும் பால் ஊட்டுவதால் சலிப்பு தட்டலாம்.
2. இது குறுகிய கால கட்டத்துக்குத் தான் உகந்தது. குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்கு மட்டுமே வேலை செய்யும்.
3. பல தாய்மார்கள் ஆறு மாதம் கடந்தும் இது வேலை செய்வதாக நினைத்துக் கொண்டோ, அல்லது தேதிகளை சரியாக குறிக்காமல் விட்டோ, கர்ப்பமாக வாய்ப்புண்டு. இந்த கருத்தடை முறையின் திறன் மிக அதிகம் என்பதால், மேலே கூறியவற்றை சரியாக கடைப்பிடித்தால், உங்களுக்கு அடுத்த ஆறு மாதங்களுக்கு கருப்பிடிக்க வாய்ப்பு இல்லை. ஆனாலும், ஒரு சதவீத வாய்ப்பு உள்ளதால், நீங்கள் மேலும் ஒரு கருத்தடை சாதனத்தை (ஆணுறை போல) உபயோகித்தால், கருப்பிடிக்க அறவே வாய்ப்பு இல்லை.