Home பெண்கள் தாய்மை நலம் இயற்கையான கருத்தடை முறைகள்

இயற்கையான கருத்தடை முறைகள்

12

உடலுறவின் போது கருத்தரிப்பதைத் தடுப்பதற்காக கருத்தடை முறைகள் பயன் படுத்தப்படுகின்றது .இதிலே பல முறைகள் உள்ளது. அதிலே ஒன்றுதான் இயற்கையான கருத்தடை முறையாகும்.இயற்கையான முறை எனப்படுவது எந்தவிதமான உபகரணங்களையோ அல்லது மருந்துகளையோ பயன்படுத் -தாமல் மேற்கொள்ளப்படும் முறையாகும்.

இது இரண்டு விதமாக மேற்கொள்ளப்படலாம்.

முதலாவதாக கருத்தரிக்கும் சந்தர்ப்பம் குறைவாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதுடன் ,கருத்தரிக்கும் சந்தர்ப்பம் அதிகமாக உள்ள நாட்களில் உடலுறவில் ஈடுபடுவதைத் தவீர்க்கும் முறையாகும்.இந்த நாட்கள் ஒவ்வொருபெண்ணுக்கும் வேறுபாடும் .

அந்த நாட்களை கணித்துக் கொள்ளும் முறையை இந்த இடுகையில் வாசித்தறியவும்.இந்த முறை ஒழுங்காக மாதமொருதடவை மாதவிடாய் ஏற்படுகின்ற பெண்களுக்கே உகந்தது.

அடுத்த முறையானது உடலுறவின் போது ஆண் விந்தணுக்களை பெண் உறுப்பினுள்ளே செலுத்தாமல் ஆண்குறியை வெளியில் எடுத்தல்.
இது உச்சக்கட்டத்திற்கு(climax) முன் கட்டுப்பாட்டுடன் ஆண் குறியை வெளியெடுக்கக் கூடிய ஆண்களுக்கே சிறந்தது.

இந்த இயற்கை முறைகள் பக்க விளைவுகள் குறைந்தது என்றாலும் அவற்றின் நம்பகத் தன்மையானது மிகவும் குறைவாகும். அதனால் குழந்தைகளை எதிர்பார்த்திருக்காத தம்பதிகள் இந்த இயற்கையான முறைகளை நம்பாமல் நம்பகமான வேறு ஒரு முறையினை
பாவிப்பது கட்டாயமாகும்.