பெண்களை என்ன செய்தால் தன்பக்கம் இழுத்துவிடலாம் என்று தெரியாததால் தான் பல ஆணு்களும் வீட்டில் பிரச்னை வருகிறது என்று பாதி நேரம் வெளியில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
திருமணம் ஆகிப் பல வருடங்கள் ஆன பின்னும் கூட மனைவியை சமாளிக்கத் தெரியாமல் முழி பிதுங்குவோர் கூட்டம் தான் ஆண்களில் அதிகம்.
ஆனால் என்ன செய்தால் மனைவியை ஈஸியாக மயக்கி விட முடியும் என்று தெரிந்து கொண்டாலே போதும். எப்பேர்பட்ட பெண்ணாக இருந்தாலும் சமாளித்துவிடலாம்.
பல ஆண்கள் இதைச் செய்வதே கிடையாது. அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும்போது, ஒரு போன் செய்து, உனக்கு இது பிடிக்குமே இன்னைக்கு வாங்கிக்கிட்டு வரவா?’ன்னு சின்சியரா ஒரு கேள்வி கேளுங்க. பாதிநாள் ‘செலவு எதுக்கு? வேணாம்ன்னுதான் பதில் வரும். அதனால் பர்ஸ் காலியாகிவிடும் என்று பயப்படாதீர்கள்.
காலையில் நீங்கள் அவர்களுக்கு முன்பே எழுந்துவிட்டால் காபி போட்டு கொண்டுபோய் பெட் காபி சர்வீஸ் பண்ணி அசத்துங்க. லீவு நாளானால் பெரிதாக எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. பிரெட் டோஸ்ட் போட்டு ரெண்டு ஆம்லெட் ரெடி பண்ணி கொடுங்க. அன்னைக்கு மதியம் உங்களுக்கு பெரிய விருந்தே நடக்கும்.
உங்கள் அறையில் துவைத்த துணிகள் கட்டிலில் குவித்து வைக்கப்பட்டிருக்கும். அதைப் பார்த்து பல ஆண்கள் கோவப்படுவதுண்டு. ஆனால் உங்கள் கோபத்தைத் தூக்கி கொஞ்சம் தூர வைத்துவிட்டு, குறைந்தபட்சம் உங்கடைய துணியையாவது மடித்து அடுக்கி வையுங்கள்.
ஒருவேளை உங்கள் மனைவி குண்டானவராக இருந்தால் நீங்களே அடிக்கடி கிண்டல் செய்திருப்பீர்கள். அதெல்லாம் அவர்களுடைய மனதில் அப்படியே இருக்கும். ஆனாலும் சில நேரங்களில் இந்த சேலையில் நீ குண்டாவே தெரியலையே என்று கொஞ்சம் லேசாகப் புகழ்ந்து பாருங்கள்.
வீட்டில் தேவையிருந்தால் எங்காவது ஆணி அடித்துக் கொடுப்பது. கிரைண்டர், மிக்ஸியில் நட்டு, போல்ட் மாட்டிக் கொடுப்பது போன்ற வேலைகளை அவ்வப்போது செய்து கொடுங்கள்.
எப்போதும் அம்மாக்களை நச்சரிக்கும் குழந்தைகளை விடுதுறை நாட்களில் சில மணி நேரமாவது நீங்கள் மேய்க்க கற்றுக் கொள்ளுங்கள்.
சமையல், துணி துவைப்பது, அயர்ன் செய்வது எல்லா வேலையும் அவர்கள் செய்துவிட, நீங்கள் அதில் ஏதாவது குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பதை நிறுத்துங்கள்.
இதுபோன்ற சின்ன சின்ன விஷயங்களுக்காக பெண்களிடம் நீங்க்ள விட்டுக்கொடுத்தால் பெரிய விஷயங்களில் அவர்கள் உங்களுக்காக விட்டுக் கொடுப்பார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.