நல்ல காதலனைத் தேடிக்கொண்டிருக்கிற, இன்னும் காதலில் மாட்டிக்கொள்ளாத பெண்களுக்கு இந்தக் காலத்துப் ஆண்களைப் பற்றிய சில எச்சரிக்கைக் குறிப்புகள்… அவன் என்னை காதலிக்கிறானா? என்னைத் தான் காதலிக்கிறானா என்ற பரபரப்பு வேண்டாமே…
இந்தக்காலத்தில் பெண்களை ஏமாற்ற ஆண்கள் என்னவெல்லாம் செய்வார்கள் தெரியுமா?…
நன்கு தலைமுடிக்கு விதவிதமா ஜெல் போடுவார்கள். சிலநேரம் கலரைக் கூட மாற்றுவார்கள் (நரையை மறைக்க – ஸ்ரைல் என்று ஏமாற வாய்ப்புண்டு).
பொய்யாக துயரக் கதையெல்லாம் சொல்லி, பார்த்தாலே நமக்கு அழுகை வருவது மாதிரி முகத்தை வைத்துக்கொண்டு அனுதாபம் தேடி லவ் லெட்டர் நீட்டுவார்கள். ஐ லவ் யூ சொல்லுவார்கள்.. ஏற்றுக்கொண்டீர்களெனில்.. அப்புறம் அந்தத் துயரக் கதையையெல்லாம் நீங்க சொல்லிட்டுத் திரிய வேண்டியிருக்கும்.
நாலைந்து நாட்களாக உங்களை லுக்கு விட்டுட்டுப் பின்னால திரிஞ்சவன் திடீரென ஒருநாள் நீங்கள் (அன்றைக்கு பார்த்து குளிச்சு, அழகா ட்ரஸ் பண்ணி, வாசனையெல்லாம் பூசி, தேவதை பீலிங்கோட வந்திருப்பீங்க) வருவதைப் பார்த்தும் கண்டுக்காமல் இருப்பான். மூஞ்சைத் திருப்பிப்பான். நீங்க இதைப் பார்த்துட்டு ‘ஐயோ இவனுக்கு என்ன ஆச்சோ’ன்னு பரிதாபப்பட ஆரம்பிப்பீங்க. அந்தப் பரிதாபம் லவ்வுல முடியும்… ஜாக்கிரதை.
உங்களுக்கு மியூசிக்ல விருப்பமிருக்குங்குறது அவனுங்களுக்குத் தெரிஞ்சிடுச்சின்னு வச்சிக்கோங்க..அப்புறம் ஏதோ ஒரு மியூசிக் இன்ஸ்ட்ரூமெண்ட (அட்லீஸ்ட் ஒரு புல்லாங்குழல்) எப்பவும் தன் கூடவே வச்சிட்டுத் திரிவான். மனசுக்குள்ள ‘ஜே ஜே’ மாதவன் என்ற நினைப்பில்.. நீங்களும் பூஜா மாதிரி விழுந்திட்டீங்கன்னு வச்சிக்குங்க.. அப்புறம் உங்களுக்குக் கூஜாதான்..
நம்ம தனுஷ் சினிமாவுக்கு வந்த பின்னாடி வந்த பேஷன் இது… பையன் இடுப்பு சைஸ் 29 இருக்கும்… ஆனா 36 சைஸ் ஜீன்ஸ் போட்டுட்டுப் பின்னால திரிவான்.. எப்ப கழண்டு விழுமோன்னு பயத்தோட நீங்க பார்க்க ஆரம்பிச்சிட்டீங்கன்னு வைங்க… நீங்க கவுந்துட்டீங்கன்னு அர்த்தம்…
அப்புறம் அதுல அவன் பர்ஸ் பார்த்தீங்கன்னா அரை அடி தள்ளிட்டே, ரொம்பப் பெருசா இருக்கும்…
பயபுள்ளைக்கு எங்கிட்டும் போக வேண்டிய அவசியமிருக்காது… வீட்டிலயும் சொல்லிப் பிரயோஜனமில்லைன்னு தண்ணி தெளிச்சு நேர்ந்து விட்டிருப்பாங்க… ஆனாலும் பார்த்தீங்கன்னா பையன் உங்க முன்னாடி ட்ராவலிங் பேக்கோட, ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி அலைவான்… இதெல்லாமே ஏமாற்று வேலை தான்.
ஏதோ பெரிய ஆபிஸர் மாதிரி ட்ரஸ் பண்ணிட்டு , டையை நீங்க பார்க்குற மாதிரி பாக்கெட்ல வச்சிட்டுத் திரியுறான்னு வச்சிக்குங்க… உடனே நம்பி ஏமாந்திடாதீங்க.
திடீர்ன்னு ஒரு நாளைக்கு பாத்ரூமுக்குப் போடுற ரப்பர் சிலிப்பர் போட்டுட்டு வந்து நிப்பான்… தப்பித்தவறிக் கூட ஏனுன்னு கேட்டுடாதீங்க…
பையன் பெரிய சைஸ்க்கு வாட்ச் கட்ட ஆரம்பிக்கிறது. ஸ்போர்ட்ஸ் ஷூ போடறது, கூலிங் கிளாஸ் போட்டுக்குறது, அழகா தொப்பி போட்டுக்குறதுன்னு இருந்தா கண்டுக்கவே கண்டுக்காதீங்க… எல்லாம் வயசை மறைக்கிறதுக்காகத்தான்.