காலையில் எழுந்தவுடன் வாசல் தெளித்தால் கிருமிகள் வீட்டில் வராமல் இருக்கும். அதே சமயம் நல்ல பிராண வாயுவை உள்வாங்கி ரத்த ஓட்டத்தைச் சீர் செய்து நோய் நிலையைக் குணப்படுத்திவிடும். காலையில் எழுந்து குளித்து கோலம் போட்டால் மூளைக்கு ரத்த ஓட்டம் நன்றாகச் செல்லும்.
அதனால் தலையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி உள்பட அனைத்துச் சுரப்பிகளும் நன்றாகச் செயல்படும். மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக இவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் இந்தியன் முறை கழிப்பறையில் மலம் கழிப்பது குக்குடாசனம் என்ற ஆசனம்; வீடு மொழுகுதல்கூட ஆசனம்;
பிறந்தது முதல் வாழ்நாள் முழுவதும் நம்மை அறியாமல் நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் ஒரு ஆசனம். அது 80 லட்சத்து 20 ஆயிரம் ஆசனம். உடற்பயிற்சி இல்லாமலேயே உடல் பருமன் ஏற்படுகிறது.
உடல் பருமன் உள்ள பெண்களுக்கு குழந்தைப் பேறின்மை ஏற்படுகிறது. இதற்குப் பல வைத்திய முறைகள் மேற்கொண்டு பணம் அதிகமாக செலவு செய்து மன உளைச்சல் ஏற்பட்டு வருந்துகிறார்கள்.