Home சூடான செய்திகள் இந்த 10 விடயங்களில் பெண்கள் தான் உச்சம்….

இந்த 10 விடயங்களில் பெண்கள் தான் உச்சம்….

27

48736610woman-500x500நாங்கள் தான் வீரமானவர்கள், குடும்ப தலைவர்கள் என பல விஷயங்களில் ஆண்கள் தங்களை பெரிதாக நினைத்துக் கொண்டாலும். ஆண்மையை பெற்றுடுத்த பெண்மை தான் சிறந்தது என்பதை நாம் யாரும் மறக்க முடியாது. வீட்டு வேலை மேலாண்மை மட்டுமின்றி, அலுவலக மேலாண்மையிலும் கடந்த தசாப்தங்களாக பெண்கள் சிறந்து விளங்கி வருகிறார்கள்.

பள்ளிகளில் ஸ்டேட் ரேன்க் வாங்குவதில் துவங்குகிறது பெண்கள் ஆண்களை முந்துவது. நினைவாற்றல், அறிவாற்றல், தலைமை வகிப்பது, பெற்றோர் நலன், குழந்தை வளர்ப்பு என 360 டிகிரியிலும் பெண்கள் சுத்தி, சுத்தி ஆண்களை பின்னுக்கு தள்ளி பல துறைகளில் முதன்மை வகிக்க துவங்கிவிட்டனர்.

ஆனால், பொதுவாக சிலவற்றில் ஆண்கள் தான் சிறந்தவர்கள் என நாம் நினைத்துக் கொண்டிருப்போம், ஆனால், அதிலும் பெண்கள் தான் சிறந்து விளங்குகிறார்கள் என ஆய்வுகளின் மூலம் நிரூபணம் செய்துள்ளனர். அவற்றை பற்றி இனிக் காண்போம்….

செயல்பாடு # 1
வேலை மற்றும் வீடுகளில் மன அழுத்தத்தை எதிர்கொள்வதில், கட்டுப்படுத்துவதில் ஆண்களை காட்டிலும், பெண்கள் சாமர்த்தியசாலிகள்.

செயல்பாடு # 2
உலகளவில் எடுத்த கணக்கெடுப்பில் கார் விபத்துகளில் உயிரிழந்தவர்களில் ஆண்களை காட்டிலும் பெண்கள் குறைவு தான் எனிலும், இவர்கள் ஆண்களை விட சிறப்பாக, கட்டுப்பாட்டுடன் ஓட்டுகின்றனர் எனவும் அறியப்பட்டுள்ளது.

செயல்பாடு # 3
ஓர் துறை அல்லது பிரிவில் தலைமை பதவி வகிப்பதில், அந்த தலைமையை திறம்பட ஆளுமை செலுத்துவதில் ஆண்களை காட்டிலும் பெண்கள் சிறந்து விளங்குகின்றனர்.

செயல்பாடு # 4
பொதுவாகவே ஆண்களுடன் ஒப்பிடுகையில் பெண்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையாக உள்ளதாம்.

செயல்பாடு # 5
பெற்றோர் மீது அக்கறை எடுத்துக் கொள்வதிலும் கூட பெண்கள் தான் சிறந்து விளங்குகின்றனர். இதற்கு முக்கிய காரணம் பெண்களின் பொறுமையும், அமைதியும் தான்.

செயல்பாடு # 6
பலரும் பெண்கள் அதிகமாக உடை வாங்குவார்கள், பியூட்டி பார்லர், உபகரணங்கள் என பணத்தை அநாவசியமாக செலவு செய்வார்கள் என கூறுவார்கள். ஆனால், ஆண்களை காட்டிலும் சிக்கனமாக செலவு செய்வதிலும், பணத்தை சேமிப்பதிலும் பெண்கள் பலே கில்லாடிகள்.

செயல்பாடு # 7
உண்மையில், சைட் அடிப்பதில் இருந்து, தாம்பத்தியத்தில் ஈடுபடுவது வரையிலும் ரொமாண்டிக்கில் ஆண்களை காட்டிலும் பண்ணி பெடலெடுப்பதில் பெண்கள் தான் சிறந்தவர்களாம்.

செயல்பாடு # 8
100% நாம் அனைவரும் அறிந்தது தான். குழந்தை வளர்ப்பில் பெண்களோடு ஆண்கள் போட்டியிடவே முடியாது.

செயல்பாடு # 9
தமிழகத்தில் மட்டுமல்ல, உலகளவில் பள்ளி படிப்பில் ஆண்களை விட பெண்கள் தான் சிறந்த அளவில் தேர்ச்சி பெறுகின்றனர்.

செயல்பாடு # 10
கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் அறிவாற்றல் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு அதிகமாம்.