ஆர்ப்பரிக்கும் உலகிலிருந்து ஊரடங்கு மூலம் நம்மை கொஞ்சம் விலக்கிக் கொண்டு நம்மை நாம் சுயதரவு செய்து கொள்ள இதை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வோம். எக்காரணம் கொண்டும் முன்னாள் காதலர்களுக்கோ அல்லது பிரிந்து போன உறவுகளுக்கோ கால் பண்ண வேண்டாம். தேவையற்ற பழைய நினைவுகள் வரும். இந்த சமயத்தில் அது நமக்கு தேவை இல்ல.
மனித மனம் எப்போதும் சுத்தி இருக்க ஆயிரம் நல்லதை யோசிக்காது. திரும்ப கிடைக்காத ஒன்றையே யோசிக்கும். இப்போ நமக்கு தேவை சீரான மனநிலை. அதனால, உங்களுக்கு மகிழ்ச்சி தரும் மக்களுடன் நேரத்தை செலவிடுங்க. சுத்தி பாருங்க. வாழ்க்கை ரொம்ப அழகானது. இந்த கொரோனா குறித்த பயம் வேண்டாம்.
இலுமிநாட்டி, பயோ வார் போன்ற வதந்தி மெசேஜ்கள் மக்களை பெருமளவு பயப்பட வைத்துள்ளது. கவலைப்பட வேணாம். உலகம் அழியாது. வீண் வதந்தி பரப்பும் மெசேஜ்களை கண்டு சிரித்துவிட்டு நகர்ந்து போய்டுங்க. முடிஞ்சா இந்த கொரோனா பற்றிய செய்திகளை அதிக அளவு பார்க்க வேண்டாம்.