இந்த தலைமுறையினர் உடலுறவை பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டிய 3 விஷயங்கள்!
ஒருவனுக்கு ஒருத்தி என்ற பண்பை வளர்த்த, கற்பித்த நமது சமுதாயத்தில் தான், இன்று பல முக்கிய நகரங்களில் திருமணதிற்கு முன்னரே உடலுறவு என்பதை மிக சகஜமாக எடுத்துக் கொண்டு வருகிறார்கள். இதிலும் கல்லூரி மாணவர் மத்தியில் இது காட்டுத்தீ போல பரவி வருகிறது. உடல்களின் இணைப்பு என்பது மனதின் இணைப்பிக்கு பிறகு ஏற்பட வேண்டும். காதலுக்கும், இச்சைக்கும் வேறுபாடு தெரியாமல் உடலுறவில் சிக்கி வாழ்க்கையை சிதைத்து கொள்ள வேண்டாம்.
உடலுறவு என்பது பயங்கரமானது அல்ல, சரியான புரிதல் மற்றும் தன்னிலை அடக்குதல் எனும் இரண்டின் பற்றாக்குறை தான் இன்று சமூகத்தில் பல கற்பழிப்பு சம்பவங்கள் ஏற்பட காரணமாக இருக்கிறது. கொஞ்சம் தோல் தெரிந்தாலும் இச்சை எண்ணம் அதிகரிக்கிறது எனில் இதற்கு நமது கலாச்சார மாற்றமே காரணம். உடலுறவு என்பது இயற்கையான ஒன்று, இதை பயங்கரவாதமாக மாற்ற வேண்டாம்.
உடலுறவில் ஈடுபடவில்லை என்றால் யாரும் இங்கு இறந்துவிட போவதில்லை என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் நாம் அனைவரும் அடைய வேண்டியவை எண்ணற்றக் கணக்கில் இருக்கும் போது, சிறு இச்சைக்கு மயங்கி வாழ்வினை வீணாக்க வேண்டுமா? இது ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.
பெரியவர்கள், பருவ வயதை எட்டும் போதிலிருந்தே உடலுறவு என்பது தகாத செயல்பாடு என்று, தவறான கண்ணோட்டத்தில் கற்பிப்பது தவறு. உடலுறவை பற்றி தெளிவான தகவல்கள் பருவ வயதில் கற்பித்தல் வேண்டும். உடலுறவு என்பது மிகவும் சாதாரணம் என்று தெரிந்தால், கற்பழிப்பும், திருமணத்திற்கு முந்தைய உடலுறவும் குறைய வாய்ப்புகள் உண்டு.
காதல் தோல்விக்கு பிறகு மற்றுமொரு காதல் வருவது இயல்பு, இயற்கை. ஆனால், ஆசையை காதலாக உருவகம் செய்துக் கொள்வது தவறு. சிறு, சிறு ஆசைகளை தவறுதலாக காதல் என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டாம். இதனால் தான் இன்று பல காதல்கள், கண்மூடி திறக்கும் முன்னரே கலைந்துவிடுகிறது.
அவன் செய்தான், அங்கு நடந்தது என கண்ட உதாரணங்களை கண்டு வாழ்க்கையை ஒப்பேற்றிவிட்டு போகாமல், நல்ல உதாரணங்களை கண்டு, உங்கள் காதல் வாழ்க்கை சிறக்க முயற்சி செய்யுங்கள்.