Home பாலியல் இந்த ஒரு விஷயம் தான் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என தெரியுமா?

இந்த ஒரு விஷயம் தான் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என தெரியுமா?

27

4-13நமது முன்னோர்கள் கரும்புச் சர்க்கரை, பனங் கற்கண்டு போன்ற இயற்கை பொருட்களை தான் உணவில் சுவைக்காக சேர்த்து வந்தனர். ஆனால், கடைசி 30 – 40 ஆண்டுகளாக நாம் மாற்றிக் கொண்ட வெள்ளை சர்க்கரை வழக்கம் தான் ஆண்மை குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு போன்ற பல பாதிப்புகள் சர்வ சாதாரணமாக உண்டாக முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

அதிலும், முக்கியமாக செக்ஸ் வாழ்க்கையை இந்த வெள்ளை / செயற்கை சர்க்கரை வலுவாக பாதிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்றாகும்….

உடல் பருமன்:

காபி, கூல்ட்ரிங்ஸ், ஸ்வீட்ஸ் என அனைத்திலும் சேர்க்கப்படும் வெள்ளை செயற்கை சர்க்கரை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பது, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியின் உற்பத்தியை பாதித்து, தாம்பத்திய வாழ்க்கையை கெடுக்கிறது.

பெண்ணுறுப்பு:

சர்க்கரை, இரத்த நாளங்களில் இருக்கும் சிறு பாகங்களான பாலுறவில் மகிழ்வுண்டாக்குகின்ற மண்டலங்களில் இரத்த ஓட்டத்தை தடை ஏற்பட காரணியாக இருக்கிறது. இதனால் பெண்ணுறுப்பு பகுதியில் வறட்சி மற்றும் இன்பமடைதலும், ஆண்கள் மத்தியில் விறைப்பு குறைபாட்டையும் சர்க்கரை உண்டாக்குகிறது.

இரத்த சர்க்கரை:

வெள்ளை சர்க்கரை இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மை உடையது. இதனால், நரம்பு மண்டலங்களில் நாள்பட எதிர்மறை தாக்கங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், நீரிழிவு பாதிப்பும் உண்டாகலாம்.

உடலுறவில் வலி:

அதிகப்படியான சர்க்கரை, பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று, அரிப்பு, வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. இதனால், உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் வலிமிகுந்து உணர்கிறார்கள்.

உச்சம் காண்பதில் தடை:

மேலும், சர்க்கரை உடலில் இன்பம் மற்றும் வலியை குறைக்கும் ஹார்மோன்களான டோபமைன், செரோடோனின், மற்றும் எண்டோர்பின் போன்றவற்றில் தாக்கம் ஏற்படுத்தி, அதன் சீரான உற்பத்தியை தடுக்கிறது. இதனால், செக்ஸ் வாழ்க்கையில் உச்சம் அடைவது தடைப்படலாம்.