Home அந்தரங்கம் இந்தக்கால இளம்பெண்கள் தூங்கும் போது பொம்மையை கட்டிப்பிடித்து தூங்க காரணம் என்ன தெரியுமா?

இந்தக்கால இளம்பெண்கள் தூங்கும் போது பொம்மையை கட்டிப்பிடித்து தூங்க காரணம் என்ன தெரியுமா?

102

நடிகையானாலும் சரி, கல்லூரி படிக்கும் இளம் பெண்களாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் சோஷியல் மீடியாவில் பதிவிடும் புகைப்படங்களில் பார்த்தால் நிறைய இடங்களில் டெட்டி பியர் பொம்மை தென்படும். கல்யாண வயசு பெண்ணாக இருந்தாலும், பிறந்த நாள் பரிசாக டெட்டி பியர் பொம்மை கொடுத்தால், உற்சாகத்தில் துள்ளிக்குதிக்கின்றனர். இது ஒரு வகையில் குழந்தைத்தனம் என்றாலும், அதிகம் பொம்மைகளை விரும்ப உளவியல் ரீதியாவும் சில காரணங்கள் உண்டு.

எந்த ஒரு மனிதனும், பாதுகாப்பில்லாத நிலையை அடைவது தூங்கும் போது தான். எப்படிப்பட்ட வலிமை கொண்டவனாக இருந்தாலும், தூங்கும் சமயத்தில் எச்சரிக்கை தேவைப்படும். தன்னிலை மறந்த நேரம் அது. ஒரு வீரனுக்கே தூங்கும் போது, எச்சரிக்கை என்ற ஆயுதம் துணையாக தேவைப்படும் போது, உடலாலும், மனதாலும் மென்மையான பெண்ணுக்கு ஒரு அரவணைப்பு தேவைப்படுகிறது. குழந்தையாக இருக்கும் போது, பெற்றோரின் அரவணைப்பு கிடைத்திருக்கும்.

வளர்ந்து பதின்ம நிலையை அடைந்த பெண்களுக்கு, பெற்றோர் தரப்பில் இருந்து அரவணைப்பு கிடைப்பது குறைந்து விடும். எண்ணங்கள், ஆசைகள் அலைபாயும் அந்த வயதில், போதிய அரவணைப்பு கிடைக்காத பெண் குழந்தைகளுக்கு, பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுகிறது. அதனை குறைத்துக்கொள்ள தலையணையை கட்டி அணைத்து உறங்குவதும், பொம்மையை கட்டியணைத்து உறங்கும் பழக்கமும் உருவாகிறது. பெண்களும் மனதால் சிறு குழந்தைகள் தான், போதிய கவனிப்பு இன்றி இந்தநிலைக்கு செல்ல பெற்றோர்களும் ஒரு காரணமாகின்றனர்.

பருவ வயதில் காமம் சாத்தியமற்ற போதிலும், உடல் அரவணைப்பு அவசியமாகிறது. இப்போது பல வீடுகளில் தனியறை பழக்கம் வந்துவிட்டதால், தனிமை சார்ந்த அச்சங்களுக்கும் பொம்மையை கட்டிப்பிடித்து தூங்குவது மருந்தாக அமைகிறது. கிராமசூழலில் கூட்டுக்குடும்பத்தில் வளரும் பெண் குழந்தைகளுக்கு இந்த பழக்கம் இருப்பதில்லை. நகர சூழலில் வளர்ந்த பெண்களிடத்தில், இந்த பழக்கம் அதிகமாக இருப்பதை காண முடியும். எல்லாமே அவரவர் வளரும் சூழ்நிலையை பொறுத்தது.