பனிக்காலத்தில் வழக்கத்தை விடவும் உதடு வறட்சியடைந்து தான் காணப்படும். என்னதான் பெட்ரோலியம் ஜெல், லிப் பாம் என்று உபயோகித்தாலும் அது சில நிமிடங்கள் வரை மட்டுமே தாக்குப்பிடிக்கும்.
கீழ்கண்ட இயற்கை வழிமுறைகள் சிலவற்றை முயற்சி செய்து பாருங்கள். நிச்சயம் இந்த பனியில் உங்கள் உதடு தப்பித்துவிடும்.
தோட்டத்தில் பறித்த கொத்தமல்லியை நன்றாக அரைத்து, இரவு படுப்பதற்கு முன் உதட்டில் தடவிக் கொண்டால், உதடு சிவப்பாக மாறும்.
சிலருக்கு உதட்டில் வெள்ளைத் திட்டுகள் இருக்கும். இதைப்போக்க, வில்வ மரக் காயின் ஓட்டை, தாய்ப்பால் விட்டுத் தேய்த்தால் மை போல் வரும். இந்த மையை உதட்டில் தடவினால் வெள்ளைத் திட்டுகள் மறையும்.
உதட்டில் வெடிப்பு ஏற்பட்டு எரிச்சல் தரும். இதைத் தவிர்க்க, பாக்கு மரத்தின் வேரைக் கஷாயம் வைத்துக் குடித்தால் உதடு வெடிப்பும், எரிச்சலும் குணமாகும்.
பாலக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டால், வாய்ப்புண்ணும், உதடு வெடிப்பும் குணமாகும்.
பனிக்காலத்தில் உதடுகளில் வெடிப்பு ஏற்படும். இதற்கு, கரும்புச் சக்கையை எரித்துச் சாம்பலாக்கி வெண்ணெய்யில் குழைத்து உதட்டில் தடவினால் உதடு வெடிப்பு குணமாகும்.
கரும்புச் சோலையை எரித்துச் சாம்பலாக்கி, தேங்காய் எண்ணெய் அல்லது வெண்ணெய்யில் குழைத்து உதட்டில் தடவினால், உதடு வெடிப்பு சரியாகும்.