Home சூடான செய்திகள் இதெல்லாம் பொண்ணுக அவங்களா சொல்ல மாட்டாங்க, நீங்கதான் கேட்டு தெரிஞ்சக்கணும்…

இதெல்லாம் பொண்ணுக அவங்களா சொல்ல மாட்டாங்க, நீங்கதான் கேட்டு தெரிஞ்சக்கணும்…

47

லவ் பண்ணா மட்டும் போதுமா? தாலி கட்டிட்டா மட்டும் போதுமா? நாங்க என்ன ஃபீல் பண்றோம், என்ன நினைக்கிறோம்-ங்கிறத அவங்களா தெரிஞ்சுக்க வேண்டாமா? என கோபத்தை எரிமலை குழம்பாக கொட்டுகிறார்கள் பெண்கள்.

கூல்! என்ன விஷயம் என்று கேட்டால்… இந்த சில விஷயங்களை எல்லாம் நாங்களாக சொல்ல மாட்டோம்… ஆனால், கணவன்மார்கள் / காதலர்கள், அவர்களாக எங்கள் மனநிலை, ரியாக்ஷன் கொண்டு புரிந்துக் கொண்டு எங்களிடம் என்ன, ஏது என கேட்க வேண்டும் என கூறுகிறார்கள். அப்படி என்னென்ன விஷயம் பெண்கள் தங்கள் துணையிடம் இருந்து எதிர்பாக்கிறார்கள்… இதோ!

மூட் ஸ்விங் – பெண்களுக்கு அந்த நாட்களில் மூட் ஸ்விங் ஏற்படுவது இயற்கை. காரணமே இல்லாமல் கோபம் வரும், அழுவார்கள்… இதை அவர்களாக கூறமாட்டார்கள். ஆனால், ஆண்கள் தெரிந்துக் கொண்டு பக்குவமாக நடந்துக் கொள்ள வேண்டும் என கருதுவார்கள்.

மோசமான நாள் – ஒருவேளை அலுவலகத்தில், வீட்டில் யாராவது அவர்கள் மனம், வேலை பாதிக்கும்படி நடந்திருந்தால், அவர்கள் நாள் மோசமாக முடிந்திருந்தால் அதை பெண்கள் அவர்களாக கூறுவது இல்லை. தங்கள் துணையே தங்கள் நிலை மற்றும் ரியாக்ஷன் கொண்டு தங்களிடம் கேட்க வேண்டும் என கருதுகிறார்கள்.

சர்ப்ரைஸ் – தங்களுக்கு பிடித்த உணவு அல்லது பிடித்த இடத்திற்கு சர்ப்ரைசாக அழைத்து செல்ல வேண்டும். எதிர்பாராத தருணத்தில் பரிசுகள் கொடுத்து அசத்த வேண்டும் என பெண்கள் ஆசைப்படுகிறார்கள்.

பிடிக்குமா – இது பிடிக்கும், பிடிக்காது என தாங்களாக சொல்லாமல், அவர்களாக அறிந்துக் கொள்ள வேண்டும். வெளியூர் பயணங்கள் சென்றால், தங்களிடம் கேட்காமலேயே, நாங்கள் கூறாமலேயே எங்களுக்கு பிடித்தவற்றை வாங்கி வர வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.

சைஸ் – கட்டிய கணவனாகவே இருந்தாலும், தங்கள் சைஸ் என்ன என்று கூட தெரியாமல் உடைகளை தவறாக வாங்கி வரும் பழக்கம் ஆண்களிடம் அதிகம் இருக்கிறதாம். இந்த தவறை செய்யக் கூடாது. சைஸ் என்ன என்று கேட்காமல் சரியாக உடை தேர்வு செய்ய அறிந்திருக்க வேண்டுமாம்.

சூப்பர் – அம்மா அளவிற்கு இல்லை எனிலும், குறைந்தபட்சம் அம்மா உணவகம் அளவிற்கு சமைத்துப் போட்டால் கூட, சூப்பர்’மா என வாய்நிறைய பாராட்ட வேண்டும் என மனது நிறைய ஆசை வைத்திருக்கிறார்கள் பெண்கள்

உதவி – வீட்டில் விஷேசம் என்றால், அதிக வேலை பளு என்றால், நாங்களாக உதவிக்கு அழைக்காமல், அவர்களாக முன்வந்து நான் ஏதனும் உதவட்டுமா என கேட்க வேண்டுமாம்.

பரிந்துரை – இத பண்ணலாமா? இது எப்படி இருக்கும்? நீ என்ன நினைக்கிற? என ஏதனும் ஒரு பொருள் வாங்கும் போதோ, புதியதாக ஏதேனும் துவங்கும் போதோ தங்களிடமும் சட்ஜஷன் கேட்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள்.