பெண்களுக்கு அழகே தலைமுடி தான். நீளமான தலைமுடியைப் பார்த்தே அந்த பெண்ணை காதலித்த ஆண்கள் பலர் உண்டு. தலைமுடி சிலருக்கு நீளமாக இருந்தாலும் எலி வால் போல ஒல்லியாக இருக்கும். நீளமாக குறைவாக இருந்தாலும் அடர்த்தியாக உள்ள கூந்தல் தான் மிக அழகாக இருக்கும்.
இன்றைய சூழலில் முடி உதிர்வதற்கு ஏராளமான வழிகளை நாம் பின்பற்றுகிறோமே தவிர முடி வளர்ச்சியைத் தூண்டும் வழிகளை நாம் மறந்துவிடுகிறோம்.
தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டும் வகையில் நம்முடைய வீட்டிலுள்ள சில பொருள்களைக் கொண்டே சிம்பிளாக தலைமுடியைப் பராமரிக்கலாம்.
வாரம் ஒருமுறை தலைக்கு குளிக்கும் போது ஒரு மணி நேரத்துக்கு முன்பாக, தலையில் வேர் முதல் நுனி வரை சுத்தமான வெண்ணையை தடவி, சிறிதுநேரம் மசாஜ் செய்யவும். பின்பு சீயக்காய் தேய்த்து குளிக்கவும். இதைத்தொடர்ந்து பின்பற்றினால் இரண்டு மாதத்துக்குள் நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள்.
முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் தனியாக எடுத்து, தலையில் அதனை தடவி றவைக்கவும். பின் முப்பது நிமிடங்கள் கழித்து மென்மையான ஹெர்பல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும்.
ஒவ்வொரு வாரமும், தலைக்கு குளிப்பதற்கு முதல் நாள் இரவே தேங்காய் எண்ணையையும் ஆலிவ் எண்ணையையும் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்திடுங்கள். கண்டிப்பாக ஒரு மாதமாவது தொடர்ந்து இதைச் செய்ய வேண்டும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.