Home சமையல் குறிப்புகள் ஆலு பாலக் கட்லெட்

ஆலு பாலக் கட்லெட்

23

24தேவையானவை: பசலைக்கீரை – ஒரு சிறு கட்டு, உருளைக்கிழங்கு – 2 (வேக வைத்து மசித்துக் கொள்ளவும்), பிரெட் ஸ்லைஸ்கள் – 4, பச்சை மிளகாய் – இஞ்சி அரைத்த விழுது – ஒரு டேபிள்ஸ்பூன், பிரெட் தூள் – சிறிதளவு, மைதா மாவு – அரை கப், சீஸ் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை: கீரையை நன்கு சுத்தம் செய்து பொடியாக நறுக்கி 2 கப் கொதி நீரில் 2 நிமிடம் போட்டு மூடி வைக்கவும். பிறகு நீரை வடிகட்டி, ஆறியதும் மிக்ஸியில் அரைத்தெடுக்கவும். மைதா மாவை சிறிது தண்ணீர் சேர்த்து கரைக்கவும். வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, நீரில் நனைத்து பிழிந்தெடுத்த பிரெட் ஸ்லைஸ்கள், கீரை விழுது, பச்சை மிளகாய் – இஞ்சி விழுது, சீஸ் துருவல், உப்பு ஆகியவற்ரை அகலமான பாத்திரத்தில் சேர்த்து நன்கு பிசைந்து விரும்பிய வடிவத்தில் தட்டிக் கொள்ளவும். தட்டிய கட்லெட்களை மைதா கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுத்து… டொமெட்டோ சாஸுடன் பரிமாறவும்.