ஆபாச படங்கள் பார்ப்பதால் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக ஒர் ஆய்வில் தெரியவந்துள்ளது. லண்டனில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வு ஒன்றில் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
ஆபாச படங்கள் அதிகம் பார்க்கும் நூறு ஆண்களிடம் நடத்திய சர்வேயில், அவர்களுக்கு ஆண்மை குறைவு ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பதாக ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
இதன்படி ஆபாச படங்கள் பார்க்கும்போதெல்லாம் ஆண்களின் மூளையில் உள்ள நரம்புகள் மிகவும் உணர்ச்சிவசப் படுவதாகவும், இது பாலுறவில் ஈடுபடுவதை விட அதிக உணர்ச்சியை அவர்களுக்கு ஏற்படுத்துவதால் நாளடைவில் அவர்களுடைய ஆண்மைத் தன்மையே அழிந்துவிடும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
எனவே ஒருவருக்கு செக்ஸ் உணர்வு ஏற்படும்போது அவர்கள் உடனடியாக ஒரு பெண் துணையை தேடி தங்கள் செக்ஸ் உணர்வை தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, ஆபாச படங்களை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என அவர்களின் சர்வே முடிவில் தெரிவித்துள்ளனர். இந்த சர்வே முடிவு உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.