Home சூடான செய்திகள் ஆபாச படம் அதிகம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்குமாம்: அட சிரிக்காதீங்க!

ஆபாச படம் அதிகம் பார்த்தால் கடவுள் பக்தி அதிகரிக்குமாம்: அட சிரிக்காதீங்க!

25

31-1464694397-pornban-several-porn-websites-blocked-already-600நியூயார்க்: அதிகமாக ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மிகவும் பயபக்தி உள்ளவர்களாக மாறுவதை அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழ ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் வித்தியாசமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர். அதாவது 1, 314 பேரிடம் அவர்கள் எந்த அளவுக்கு ஆபாச படங்கள் பார்ப்பார்கள் மற்றும் அவர்களின் கடவுள் பக்தி பற்றி கேள்விகள் கேட்டப்பட்டன.

ஆய்வில் கலந்து கொண்டவர்களை 6 ஆண்டுகளாக கண்காணித்து வந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு விஷயத்தை கண்டுபிடித்துள்ளனர். அதாவது வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் குற்ற உணர்ச்சியால் பயபக்தி உடையவர்களாக மாறிவிடுவது தெரிய வந்துள்ளது. இது குறித்து ஆராய்ச்சியாளர் சாமுயல் பெர்ரி கூறுகையில், மக்கள் அதிகமாக ஆபாச படங்கள் பார்க்கும்போது நம் மதப்படி அது தவறே என்ற குற்ற உணர்வு அவர்களை ஆட்கொள்கிறது. இதனால் அவர்களுக்கு பயபக்தி அதிகரித்துவிடுகிறது என்றார்.