Home சூடான செய்திகள் ஆபாசப் புத்தகம் படிக்கிறார் உங்கள் கணவர்? காரணம் இதுதான்!

ஆபாசப் புத்தகம் படிக்கிறார் உங்கள் கணவர்? காரணம் இதுதான்!

35

எனக்குத் திருமணமாகி ஆறு வருஷங்கள் ஆகின்றன. ஒரு குழந்தை இருக்கிறது. என் கணவர் நிறைய ஆபாசப் புத்தகங்களைப் படிக்கிறார். எனக்கு அது பிடிக்கவில்லை. கேட்டால் அதில் தப்பில்லை என்கிறார். பொதுவாக விடலைப் பையன்கள்தான் இதுபோன்ற புத்தகங்களைப் படிப்பார்கள், பார்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என் கணவர் இப்படிச் செய்வது விநோதமாக இருக்கிறது. அவரைத் திருத்துவது எப்படி?

உங்களுக்குப் பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்துக்காக உங்கள் கணவர் ஆபாசப் புத்தகங்களைப் படிப்பதை நிறுத்திவிட வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர். உங்கள் கணவர்தான் என்றாலும் அவரும் ஒரு தனி மனிதர். அவரது சொந்த விருப்பு வெறுப்புகளில் ஈடுபட அவருக்கு எல்லா உரிமையும் உண்டு. அதில் ஒரேடியாகத் தலையிடுவது அநாகரிகம்.

அதேசமயம் – உங்களுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மட்டும் என்றில்லாமல், இப்பழக்கம் அவருக்கே நல்லதில்லை. அல்லது உங்கள் இல்வாழ்க்கை உபத்திரவமாக இருக்கிறது என்றால், அதில் தலையிட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு.

நீங்கள் சொல்வதுபோல, பொதுவாக விடலை வயதில் கலவிகொள்ள ஆசை இருந்தும் சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில்தான். “படித்தாவது ஆசையைப் போக்கிக்கொள்வோமே“ என்று ஆபாசப் புத்தகங்களில் ஆர்வம் மிகும். திருமணமான பிறகோ – நினைத்தால், ஆசையைத் தீர்த்துவைக்க ஆள் இருப்பதோடு, குடும்பப் பொறுப்பு காரணமாக இதில் செலவிடும் நேரமும் குறைந்துவிடுவதால், இதுபோன்ற புத்தகங்களில் நாட்டம் மங்கிவிடுகிறது – இதுதான் பொதுவான நிலை.

இந்த இயல்புக்கு மாறாக, திருமணமாகி ஆறு வருடம் கடந்து, ஒரு குழுந்தைக்குத் தகப்பனாகி, குடும்பப் பொறுப்பு அதிகரித்த பின்பும் உங்கள் கணவர் இதுபோன்ற புத்தகங்களைப் படிக்கிறார் என்றால், நீங்கள் அவர் ஆசையறிந்து பூர்த்தி செய்யாமல் விட்டிருக்கலாம் அல்லது குடும்பப் பொறுப்புகளை அவர் முழுமையாக உணராமல் அசட்டையாக இருக்கலாம். இல்லை… வேலை அதிகமில்லாததால் உபரி அவகாசம் மண்டிக்கிடக்க, “போர் அடிக்கிறதே – கிளுகிளுப்பா ஏதாவது படிச்சு பொழுது போக்கலாமே” என்று இதுபோன்ற புத்தகத்தைப் படித்து விடலை வயது மலரும் நினைவுகளுக்கு அவர் மறுபிறவி கொடுக்க முயலலாம்.

காரணம் எதுவாக இருந்தாலும், இப்பழக்கத்தை நிறுத்த நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான் – உங்கள் கணவரை எப்போதுமே பிஸியாக வைத்திருங்கள் படுக்கையில் மற்றும் வெளியே கூட அதை.