ஃபேஸ்புக்கில் பொருட்களும் விற்கலாம். இதற்கு ஏதேனும் க்ரூப் மெம்பராக அல்லது பேஜ் அட்மினாக இருந்தாலே போதும்.
இதை ஏன் இங்கே சொல்கிறேன் என கேட்கிறீர்களா? கணவன் மீது கோபம் கொண்ட பெண் ஒருவர், ஃபேஸ்புக்கில் கணவனை விற்க பதிவு செய்திருந்தார்.
கணவன் – மனைவி என்ற இல்லற உறவில் சண்டைகள் இல்லாமல் இருக்காது. ஆனால், அது வீட்டு வாசல் படியை தாண்டிவிடக் கூடாது. ஆனால், இங்கே தெரேசா எனும் பெண் புருஷனை ஆன்லைனில் விற்று, உலகறிய வைரலாகி இருக்கிறார்.
டீஸிங்! தெரேசாவிற்கு யாரேனும் சப்தமாக சூயிங் கம் மெல்வது போன்று செய்து தொல்லை செய்தால் பிடிக்காது. இவரது கணவர் ராப், இணையத்தில் ஒரு காணொளிப்பதிவை கண்டு, தெரேசாவை இப்படி டீஸ் செய்தால் என்ன ஆகிவிட போகிறது என கருதியுள்ளார்.
நிறுத்து! டீஸ் செய்ய துவங்கும் முன்னர், ராப் அந்த வீடியோவை காண்பதை கண்டே செம்ம எரிச்சலாகிவிட்டார் தெரேசா. வீடியோவை நிறுத்து, சப்தத்தை குறை என எச்சரித்துக் கொண்டே இருந்துள்ளார். மனைவி எரிச்சல் அடைவதை கண்டு ஆனந்தமாகி போன ராப், வீடியோவை திரும்ப திரும்ப போட்டு, சப்தத்தை கூட்டி கடுப்பாக்கியுள்ளார். ஏற்கனவே கொதித்துக் கொண்டிருந்த தெரேசா, பழிக்குப்பழி வாங்குகிறேன் என தன் அறைக்குள் சென்றுவிட்டார்.
ஃபேஸ்புக்! தெரேசா கையில் எடுத்த ஆயுதம் ஃபேஸ்புக். கணவனை விற்றுவிடலாம் என முடிவு செய்த தெரேசா., கணவனை பற்றிய தகவல்கள், வயது, போன்றவற்றை கூறி, வீட்டு வேலைகள், கழிவறை வேலைகள் நன்கு செய்வார் என குறிப்பிட்டு, இலவசமாக கூட்டி செல்லுங்கள் என விற்பனை பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
வியப்பு! மக்கள் ரியாக்ஷன் மூலம் சிரிப்பார்கள் என்று பார்த்தால், பலரும் 33 வயதான ராபினை இலசமாக திருடி செல்ல கமென்ட் செய்துள்ளனர். இதை கண்டு அதிர்ந்த தெரேசா, அந்த பதிவை உடனே நீக்கிவிட்டார். இந்த பதிவை கண்டு ராப் எந்த கோபமும் அடையவில்லை. மாறாக தெரேசாவை பார்த்து கேலி செய்துள்ளார். உண்மையில் அந்த பதிவிற்கு பிறகு இருவர் மத்தியில் நெருக்கம் அதிகரித்துள்ளதாம்!