Home உறவு-காதல் ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் என்ன?

ஆண் – பெண் தவறான உறவு ஏற்பட காரணம் என்ன?

55

ஆண் பெண் – தகாத உறவுககளை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது என்பதோடு கடுமையான தண்டனையையும் அளிக்கிறது. அதே சமயம் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் உருவாகாமல் இருக்க வழிவகைகளையும்சொல்லித்தருகிறது.

ஆம்!

இல்லற வாழ்வில் உடன்பாடு இல்லையென்றால் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் விவாகரத்து செய்து கொள்ளும் வழிகளை எளிதாக்கியிருக்கிறது.

அதன் மூலம் ஆணோ அல்லது பெண்ணொ தனக்கு பிடித்தவரை மருமணம் செய்யும் உரிமையை வழங்குகிறது.
தவறான பாதைக்கு வழிகாட்டும் அத்ததை வாசல்களையும் இஸ்லாம் தடுக்கிறது.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு என்பது ஆண்-பெண் மத்தியில் இன்று சகஜமாகி வருகிறது. திருமணமான பெண்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் தன் கணவன் அல்லாத வேறு ஆணுடன் உறவு கொள்வதும், அதற்காகத் தம் திருமண வாழ்க்கையையே இழக்கத் தயாராக இருப்பதும் சர்வ சாதாரணமாகி விட்டது.

திருமணமான பெண்களுக்குக் கணவன் அல்லாத அந்நிய ஆண்கள் மீது ஈர்ப்பு ஏற்படக் காரணங்கள் என்னென்ன…?

தம்பதியருக்கிடையேயான தாம்பத்திய உறவில் திருப்தியின்மை ஏற்படுவதே இதற்கான முழு முதல் காரணம். தாம்பத்திய உறவில் தன் கணவனால் திருப்தியடைய முடியாத பட்சத்தில் அந்தப் பெண் தனது உணர்ச்சிகளுக்கு வடிகாலாக இன்னொரு ஆணின் உறவை நாடுகிறாள்.

அதேபோல தாம்பத்திய உறவின் போது, தனது உடல் ஊனங்களும், அழகும், இயலாமையும் தன் கணவனால் அநாகரிக மாக விமர்சிக்கப்பட்டாலோ, குறை கூறப்பட்டாலோகூட அந்தப் பெண் விரக்தியடைந்து வேறு நபரை நாடுகிறாள்.

திருமணமாகிக் குழந்தை பெற்ற பிறகு சில வருடங்களில் தம்பதியருக்கிடையேயான நெருக்கம் கொஞ்சம், கொஞ்சமாகக் குறையக்கூடும். திருமணத்திற்கு முன்போ அல்லது திருமணமான புதிதிலோ தன் வாழ்க்கைத் துணையிடம் பிடித்திருந்த ஒரு சில விஷயங்கள் காலப் போக்கில் பிடிக்காமல் போகலாம்.

திருமணத்திற்கு அப்பாற்பட்ட தகாத உறவு அமைய இதுவும் ஒரு காரணம். திருமணத்திற்கு முன்பு ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கு வரப்போகும் கணவன் எப்படி இருக்க வேண்டும் என்ற கனவுகளும், கற்பனைகளும் இருக்கும்.

திருமணத்திற்குப் பிறகு அந்தக் கற்பனைகள் பொய்யாகும்போது, தனக்கு வாய்த்த கணவன் குணங்கள் எதிர்பார்ப்பிற்கு எதிராக அமையும்போது, சில பெண்கள் தங்களது எதிர்பார்ப்பிற்கேற்ற வேறு ஆண்களை நாடுகிறார்கள்.