Home பாலியல் ஆண், பெண் உச்சகட்டம் எப்படிப்பட்டது..?

ஆண், பெண் உச்சகட்டம் எப்படிப்பட்டது..?

29

utchakattamபெண்களின் உச்சக்கட்டம்

பெண்கள் உச்ச நிலையை அடையும் பொது, பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும். இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.

உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.

குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.

உச்சக்கட்ட இன்பமும், பெண்குறி இறுக்கமும் பெண்களின் உச்சக்கட்டம் கருப்பையில் ஏற்படும் தாளகதியான ததைச் சுருக்கங்கள், பெண் பிறப்புறுப்பில் முன் பகுதியில் ஏற்படும் தசை இறுக்கங்கள், குதத்தில் உள்ள சுருக்குத் தசைகளில் தோன்றும் இறுக்கங்கள் இவையெல்லாம் கலந்த ஒரு கலவையாகும்.

முதல்கட்ட இறுக்கங்கள் மிகத் தீவிரமானவை. உடனுக்குடன் அடுத்தடுத்து இவை தோன்றும். ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அடுத்தடுத்து இவை ஏற்படும் உச்சக்கட்டம் நீடிக்கிறது.

போகப்போக காலதாமதம் தீவிரமில்லாத உச்சக்கட்டத்தில் மூன்று அல்லது நான்கு இறுக்கம், தீவிரமான உச்சக்கட்டத்தில் பத்து அல்லது பதினைந்து இறுக்கங்கள் ஏற்படுமாம்.

“உச்சக்கட்டம் என்பது ஏதோ அடிவயிற்றில் பிறப்புறுப்பில் மட்டுமே ஏற்படுகிற நிகழ்வு இல்லை” என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மாறக முழு உடலிலும் தோன்றும் சிலிர்ப்பு அது. அந்த நேரத்தில் மூளை அலைகளைப் பதிவு செய்தால் அதன் தீவிரத்தை நாம் நன்கு உணர்ந்து கொள்ள முடியும்.

ஆண்களின் உச்சக்கட்டம்

பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது.

முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள், புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி, விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது.

அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.

விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம்.

ஆனால், ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.

உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றாக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.

இதே போல புட்டம் மற்றும் தொடைப் பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத் துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது.

முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும். ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை, கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன.

இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.