நாங்கள் காதல் திருமணம் செய்தவர்கள். திருமணமாகி மூன்று மாதங்கள் ஆகின்றன. ஆனால் எங்களால் தாம்பத்தியத்தில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. என்னுடைய பெண்ணுறுப்பு சிறியதாக இருக்கிறது என்கிறார் என் கணவர். சில நேரங்களில் தன்னால் இயலவில்லை என்கிறார். எங்களில் யாரிடம் குறை இருக்கிறது? இதை எப்படி நிவர்த்தி செய்வது?
குறை இருப்பதைவிட உங்கள் இருவருக்குமே குறை எதுவும் இல்லாமல் இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.
வனஜனா எனப்படும் ஜனனக் குழாய் உண்மையில்கர்ப்பப் பைக்கும் வெளி உலகுக்கும் இடையே இருக்கும் ஒரு மெல்லிய இடுக்குதான் என்றாலும், பிரசவத்தின்போது கிட்டத்தட்ட பதினொரு சென்டிமீட்டர் அகலம் கொண்ட சிசுவின் உடம்பை வெளிக் கொணரவல்ல அதிசய எலாஸ்டிக் திசுவினால் ஆன உறுப்பு இது.
அத்தனை அகலமான, குழந்தையையே வெளிக்கொணரவல்லது என்றால் பிறகு, 4-5 செ.மீ. அகலம் கொண்ட ஆணுறுப்பை உள்வாங்கிக்கொள்வது பெரிய விஷயமே இல்லை. என்றாலும் கருப்பையைப் பாதுகாக்கும் நுழைவாயில் என்பதால் இந்த வனஜனா அத்தனை சுலபமாக அகன்று விடாது. அவள் மனம் மிகவும் இணங்கி, அவள் துணைவன் முழு மூச்சாக முயன்றால்தான் இந்தப் பூங்கதவு தாழ்திறக்கும்.
பெண் உடம்பின் இலக்கம் இதுவென்றால் ஆணுக்கோ வேறுவிதம். ஆசை ஏற்பட்டதும் விறைப்புறும் தன்மை கொண்டது. சில ஆண்களுக்கு முடியுமோ முடியாதோ என்ற பட்டிமன்றமே மனத்தில் பிரதானமாகி விடுவதால், கவனச் சிதறல் காரணமாக முழுவிறைப்பு நேராமல் போய்விடுகிறது. அதனால் கலவி முழுமை பெறாமல் போக, இந்தத் தோல்வியை எண்ணி மருகுவதால் மறுபடி முயலும்போது பதற்றமும், அவசரமும் கூடி விடுகிறது. இப்படி ஒரு தொடர் சங்கிலியாகப் பதற்றமும் ஆசைக்குக் குறுக்கே வர, முழுவிறைப்பும் முடியாத காரியமாகி விடுகிறது.
இந்தச் சக்கர வியூகத்தை முறியடிக்க வேண்டுமானால் முதலில் இந்தப் பதற்றப் போக்கை நிறுத்தி, மனத்தை ரிலாக்ஸ் செய்யவேண்டும். எடுத்தவுடனே சிக்ஸர் அடிக்கும் பேராசையை விட்டுவிட்டு, முதலில் ஆட்டக் களத்தையும், ஆடும் டெக்னிக்கையும் பயில்வதில் மும்முரம் தேவை. இரண்டிலும் தேர்ச்சி வளர வளர, முழு முயற்சி என்றானதும் சிக்ஸர் என்ன, செஞ்சுரியே அடிக்கலாம்!
அதுவரை பொறுமையில்லை என்றாலும் அதற்கு வழி இருக்கிறது. உடனே ஒரு மகப்பேறு மருத்துவரையோ, மனநல மருத்துவரையோ அணுகி, சுலப சூட்சுமங்களைக் கற்றுக்கொண்டால் மேட்டர் ஓவர்!