டெஸ்டோஸ்டிரோன் என்பது ஒரு ஆண் செக்ஸ் ஹார்மோன். இது ஆண்களின் உடலில் பல்வேறு முக்கிய பணிகளைச் செய்கிறது. அதில் அவர்களின் விந்தணு உற்பத்தி, தசை அடர்த்தி மற்றும் வலிமை, எலும்புகளின் அடர்த்தி, கொழுப்பு பரிமாற்றம் மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தி போன்றவை குறிப்பிடத்தக்கவை. எப்போது ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறதோ, அப்போது அவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவால் கருத்தரிக்க உதவ முடியாமல் போகும். பொதுவாக ஆண் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவு வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். இந்த டெஸ்டோஸ்டிரோன் அளவு ஒரு ஆணின் உடலில் குறைவாக இருந்தால், அவர்களால் பாலியல் உறவில் சிறப்பாக ஈடுபட முடியாமல் போகும். அதாவது விறைப்புத்தன்மை பிரச்சனை, விந்தணு குறைபாடு, மார்பக திசுக்கள் வீங்கி காணப்படும். சில நேரங்களில் இந்த அறிகுறிகளைத் தொடர்ந்து உடல் முடி உதிர்வது, தசைகளின் அளவு குறைவது, வலிமை இழந்திருப்பது, உடலில் கொழுப்புக்களின் தேக்கம் அதிகரிக்கும்.
பல நாட்களாக ஒரு ஆணின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருந்தால், அது ஆஸ்டியோபோரோசிஸ், மனநிலையில் ஏற்ற இறக்கம், விதைப்பையில் சுருக்கம் அல்லது தொற்றுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஒரு ஆணுக்கு 40 வயதிற்கு மேல் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைவாக இருப்பது சாதாரணம். ஆனால் இளம் வயதிலேயே இந்த குறைபாடு ஏற்பட்டால், அதை மருந்து மாத்திரைகளின் மூலம் சரிசெய்வதற்கு பதிலாக, உணவுகளின் மூலம் அதிகரித்துக் கொள்ளலாம். இக்கட்டுரையில் ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகளின் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த உணவுப் பொருட்களைப் படித்து தெரிந்து, அவற்றை அன்றாட உணவில் சேர்த்து பலன் பெறுங்கள்.
கிழங்கு வகைகள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு கார்போஹைட்ரேட் மிகவும் முக்கியமானது. இத்தகைய கார்போஹைட்ரேட் சர்க்கரைவள்ளிக் கிழங்கு, உருளைக்கிழங்கு போன்றவற்றில் அதிகளவில் உள்ளது. அதிலும் உருளைக்கிழங்கில் க்ளுட்டன் இல்லை, மாறாக கார்போஹைட்ரேட் அதிகளவில் உள்ளதால், இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு மிகவும் சிறந்த உணவுப் பொருள்.
மெகடாமியா நட்ஸ் டயட்டரி கொழுப்புக்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு அவசியமானது. இத்தகைய கொழுப்புக்கள் நட்ஸில் உள்ளது. அதற்காக அனைத்து நட்ஸ்களிலுமே இந்த கொழுப்பு உள்ளது என்று நினைக்க வேண்டாம். கொழுப்புக்களில் சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மற்றும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் தான் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவும். ஆனால் பெரும்பாலான நட்ஸ்களில் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் தான் உள்ளது. இவை டெஸ்டோஸ்டிரோன் அளவை குறைக்கும். ஆனால் 100 கிராம் மெகடாமியா நட்ஸ்களில் 60 கிராம் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது.
காபி காபியில் உள்ள காப்ஃபைன் நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு, டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகளவில் நிறைந்துள்ளதால், காபியைக் குடிக்க தவிர்க்க வேண்டாம். நினைக்கும் போதெல்லாம் ஒரு கப் காபியை குடியுங்கள்.
பிரேசில் நட்ஸ் பிரேசில் நட்ஸில் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் மெகடாமியா நட்ஸை விட அதிகம் இல்லாவிட்டாலும், 100 கிராமில் 25 கிராம் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. அதோடு, இதில் செலினியம் அதிகம் உள்ளது. இந்த செலினியமானது க்ளுட்டாதியோனைனை தூண்டும் பண்புகளைக் கொண்டது. இதனால் நேரடியாக டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகரிக்கும். எனவே தினமும் ஒரு கையளவு பிரேசில் நட்ஸ் சாப்பிடுங்கள்.
விர்ஜின் ஆலிவ் ஆயில் ஆண்கள் தங்களது சமையலில் விர்ஜின் ஆலிவ் ஆயிலை சேர்த்க் கொள்வதன் மூலம், அதில் உள்ள நல்ல கொழுப்புக்களான மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். ஆகவே தவறாமல் சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.
உலர் திராட்சை உலர் திராட்சை டெஸ்ரோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்க உதவும். இதற்கு அதில் உள்ள ரெஸ்வெராட்ரோல் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான் காரணம். இது ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, ஈஸ்ட்ரோஜென் அளவைக் குறைக்கும்.
இஞ்சி இஞ்சியில் சக்தி வாய்ந்த ஆன்ரோஜெனிக் ஏஜென்ட் உள்ளது. இது டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை தூண்டும். எனவே விலைக் குறைவில் கிடைக்கும் இஞ்சியை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள தவறாதீர்கள்.
முட்டை முட்டை மிகச்சிறப்பான உணவுப் பொருள். இதற்கு அதில் உள்ள புரோட்டீன் மட்டுமின்றி, அமினோ அமிலங்களும் தான் காரணம். அதுவும் இந்த அமினோ அமிலங்கள் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியை அதிகரிக்கும். குறிப்பாக இதன் மஞ்சள் கருவில் தான் இந்த அமினோ அமிலங்கள் நிறைந்துள்ளது.
வெங்காயம் வெங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இதை ஆண்கள் உணவில் அதிகம் சேர்த்து வருவதன் மூலம், டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி அதிகரித்து, பாலியல் வாழ்க்கை சிறக்கும்.
பூண்டு பூண்டுகளில் உள்ள க்யூயர்சிடின், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆண் செக்ஸ் ஹார்மோனான டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். எனவே உறவில் சிறப்பாக ஈடுபட வேண்டுமானால், பூண்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள்.