Home ஆண்கள் ஆண்மை சிறக்க என்ன செய்ய வேண்டும்? கூச்சப்படாம கேட்ட நண்பருக்கு நான் சொன்ன பதில்!

ஆண்மை சிறக்க என்ன செய்ய வேண்டும்? கூச்சப்படாம கேட்ட நண்பருக்கு நான் சொன்ன பதில்!

207

இன்றைய பல குடும்பங்களில் வெளியே தெரிந்த, எல்லை மீறிய உறவுகளுக்கு, வெளியே சொல்ல இயலாத காரணம், உடல் சார்ந்த உறவில் கண்ட தோல்விகள் தான். திருமணத்திற்கு பிறகு, இதெல்லாம் வெளியில் கேட்டால், நம்மை எப்படி நினைப்பார்களோ என்று கருதிக்கொண்டு, ஒரு சிலர் தெரியாமல் செய்யும் தவறு, அவர்களுக்கு மட்டுமல்ல, அவர்களை சார்ந்த ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் பாதகமாக அமைகிறது. எனக்கு நாட்டு மருந்து பக்கம் கொஞ்சம் அனுபவம் உள்ளதால், சில நண்பர்கள் இயற்கையாக ஆண்மை அதிகரிக்கச்செய்யும் வழிமுறைகள் குறித்து, என்னிடம் சந்தேகம் கேட்பார்கள்.

அப்படி சமீபத்தில் திருமணமான, நண்பர் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொண்டால், ஆண்மை அதிகரிக்கச்செய்யலாம் என்று கேட்டார். இதற்கு பெரிய அளவில் அலசி ஆராய்ந்து பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. சிம்பிளா சொன்னால், சாப்பிடும் அன்றாட உணவில் சிறு மாறுதல் மட்டும் செய்தால் போதுமானது. வாரம் இருமுறை கடல் உணவு சாப்பிடலாம். அதிலும் மாசிக்கருவாடு வாங்கி, அவித்து பொரியல் போல சாப்பிட்டால் நல்லது.

முடிந்த வரையில் உடல் சூடு ஏறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இளநீர் குடிக்கலாம். அடிக்கடி உளுத்தங்கஞ்சி செய்து சாப்பிடலாம். திருமணமான புதிதில் பித்தம் அதிகாரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நெல்லிசாறு, இஞ்சி, தேன் கலந்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. முந்திரி பருப்பை நெய்யில் வதக்கி, மாலை நேரம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை போல சாப்பிட்டு வந்தால், விந்தணுக்கள் கெட்டிபடும். இது தவிர, பாதம் பருப்பை நீரில் ஊற வைத்து, சும்மாவே சாப்பிடலாம்.

இரவு நேரம் சரியான தூக்கம் அவசியம். தூக்கத்தை கெடுத்துக்கொண்டு விளையாட்டை ஆரம்பித்தால் அது எந்த விதத்திலும் திருப்தி தராது. நிறைவான மனதுடன், இரு உடல்கள் இணையும் போது மட்டுமே, எல்லா பலன்களும் கிடைக்கும். வாய்ப்பு கிடைத்தால், ஆட்டுக்கால் சூப் சாப்பிடலாம். முருங்கை பொரியல், முருங்கை கீரையை சமையலில் சேர்த்துக்கொள்வது இன்னும் பலத்தை கொடுக்கும். இதெல்லாம் தாண்டி, ஆண்மை சிறக்க, முதலில் நாம் நம் தனிமனித ஒழுக்கத்தை பேண வேண்டும்.