எண்ணற்ற சத்துக்களை கொண்டுள்ள புடலங்காய், ஆண்மை கோளாறுகளை போக்கும் தன்மை கொண்டது.
புடலங்காயில் நன்கு முற்றியதை உண்பது நல்லது அல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சி உள்ள காயை பயன்படுத்த வேண்டும்.
* உடல் மெலிந்து இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பருமன் அடையும்.
* அஜீரண கோளாறுகளை நீக்கி, எளிதில் செரிமானம் அடையச் செய்கிறது.
* வயிற்றுப் புண், தொண்டை புண் உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில், நோயின் பாதிப்பு பெருமளவு குறைய வாய்ப்புகள் அதிகம்.
* நரம்புகளுக்கு புத்துணர்வு அளிப்பதுடன், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
* பெண்களுக்கு உண்டாக்கும் வெள்ளைப்படுதலை குணப்படுத்தும், கருப்பைக் கோளாறையும் குணப்படுத்தும்.
புடலங்காய் கூட்டு
புடலங்காயை விதை நீக்கிவிட்டு பின் சிறிது சிறிதாக நறுக்கி கொள்ளவும், வெங்காயம், பச்சை மிளகாய் நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் 4 டம்ளர் சுடவைத்து அதில் பாசிப்பருப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, பருப்பு பாதி வேக்காடு வெந்ததும் அதில் புடலங்காய், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்க்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கறிவேப்பிலை தாளிக்கவும்.
காய் வெந்ததும் உப்பு சேர்த்து, வாணலியில் மேற்கூறியவற்றைத் தாளித்து கூட்டில் ஊற்றிக் கொதிக்க விட்டு இறக்கவும்.