Home ஆண்கள் ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்

ஆண்மையை அதிகரிக்க சில முக்கியமான டிப்ஸ்

41

11351154_1443807925915054_5062832947472506243_nகருவுறுதலில் ஏற்படும் பிரச்சனை பெண்களுக்கு மட்டும் ஏற்படுவதில்லை, ஆண்களுக்கும் தான் ஏற்படுகிறது. ஆனால் அத்தகைய பிரச்சனை தற்போது இந்தியாவில் ஆண்களிடையே அதிக அளவில் உள்ளது என்று தற்போதைய ஆய்வுகள் கூறுகின்றன. இதற்கு காரணம் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதற்கு ஆண்களது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, மன அழுத்தம் மற்றும் தம்பதியரிடையே சரியான அன்பு வெளிப்படுத்த முடியாதது என்பனவையே காரணங்களாக இருக்கும்.
ஆகவே இத்தகையவற்றை சரியாக போக்கி, ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சில டிப்ஸ் இருக்கிறது.
* ஆரோக்கியமான, ஊட்டச்சத்துள்ள உணவுகள் ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். ஆகவே தேவையில்லாமல் மருத்துவர்களிடம் சென்று பணத்தை செலவழிப்பதை விட, ஆரோக்கிய மற்றும் பாலுணர்வை, ஆண்மையைத் தூண்டும் உணவுகளான சீஸ், சிக்கன், ஓட்ஸ், கடல் உணவுகள், பச்சை காய்கறிகள், கேரட், மிளகு, முக்கியமாக மீனில் சாலமனை சாப்பிட வேண்டும்.
* புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் சாப்பிடுவதை முற்றிலும் நிறுத்த வேண்டும். நிறைய ஆண்களுக்கு இந்த பழக்கம் தேவையில்லாமல் இருக்கிறது. இவற்றை பிடிப்பதால், ஆண்மை மட்டும் குறைவதில்லை, உடலும் தான் பாதிக்கப்படுகிறது. ஆகவே இதனை நிறுத்த வேண்டும். முடியவில்லை என்றால் கர்ப்பமாகும் வரையிலாவது சாப்பிடாமல் இருக்க முயற்சியுங்கள்.
* அளவுக்கு அதிகமான எடை மற்றும் குண்டாக இருப்பது கூட, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. ஆகவே அனைத்து ஆண்களும் மனதில் கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று அளவுக்கு அதிகமாகவும், குறைவாகவும் உடல் எடை இருக்கக்கூடாது. மேலும் இனப்பெருக்கத்தை ஏற்படுத்தும் ஹார்மோன்கள் மற்றும் உறுப்புகள் நன்கு செயல்பட, ஆரோக்கியமான டயட் மற்றும் உடல் எடை இருக்க வேண்டும். எப்போதும் உடலை நன்கு பிட்டாக வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் தினமும் யோகா அல்லது உடற்பயிற்சி போன்றவற்றை செய்யலாம்.
* ஆண்களின் ஸ்பெர்ம்கள் எந்த நேரத்தில் சரியான அளவு இருக்கும் என்பதைப் பற்றி ஆய்வு மேற்கொண்ட போது, காலை நேரம் தான் அதற்கு சரியான நேரம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே இரவு நேரத்தில் காதலை வெளிப்படுத்துவதற்கு, காலை நேரத்தில் காதலை வெளிப்படுத்தினால் மிகவும் சரியாக இருக்கும் என்று கூறுகின்றனர். அதுவும் இருவருக்கும் பிடித்திருந்தால் மட்டும் காலையில் செய்ய வேண்டும்.
* நிறைய ஆய்வுகள் அதிக அழுத்தத்தின் காரணமாக, தம்பதியர்களுக்கிடையே உள்ள காதல் தடைப்பட்டு, ஆண்களின் ஸ்பெர்ம்களின் எண்ணிக்கை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே எப்போதும் அமைதியாக, எதற்கும் டென்சன் ஆகாமல், அடிக்கடி யோகா செய்தால், வாழ்க்கை நன்கு அமைதியாக, அன்பாக போவதோடு, மனமும் ரிலாக்ஸ் ஆகும். எனவே ஆண்கள் மேற்கூறிய அனைத்தையும் நினைவில் கொண்டு வாழ்ந்து வந்தால், ஆண்மை அதிகரிப்பதோடு, வாழ்க்கையும் சந்தோஷமாக செல்லும்