ஆண் இனப்பெருக்க செல்லான விந்து செல் விந்து சுரப்பியிலிருந்து (விரை) சுரக்கிறது!
இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த விந்து செல்லின் உற்பத்தி ஸ்தானமான விரைப்பை, மனித உடலில் குறிப்பாக கண், காது, மூக்கு போன்ற வெளி உறுப்புகளில் ஒன்றாகக் கருதப்பட்டாலும், அதற்கு மட்டும் பிரத்யேக
இடமான உஷ்ணம் குறைவான மனிதனின் இரண்டு கால்களின் தொடைப் பகுதிகளுக்கு இடையில் அமைந்துள்ளது.
இப்படி உஷ்ணம் குறைவான பாதுகாப்பான இடத்தில் விரைப்பை ஏன் அமைந்திருக்கிறது என்பதற்கு முக்கியத்துவம் உள்ளது.
விந்து சுரப்பி என்று சொல்லப்படும் விரைப்பை இரண்டு முக்கியமான பணிகளைச் செய்கிறது. ஒன்று, ஆண் இனப்பெருக்க செல்லான விந்து செல்லை உற்பத்தி
செய்கிறது.
இரண்டு, விந்து செல்லை உற்பத்தி செய்யும் அதே சமயத்தில் ஆணின் பாலுணர்வை தூண்டக்கூடிய டெஸ்டோஸ்டீரோன் ஹார்மோனையும் சுரக்கச் செய்கிறது. இப்படி ஆணின் பாலுணர்வு மற்றும் இனப் பெருக்கத்திற்கும் மூலகாரணமான இரண்டு முக்கியப் பணிகளை செய்யும் வகையில் விரைப்பை (விந்து சுரப்பி) முக்கியத்துவம் பெறுகிறது!