அமெரிக்காவின் ஜார்ஜியா,சுவானி பகுதியில் உள்ள ஒரு பிரபல பள்ளியில் ஃப்ரேயா என்ற 16வயது மாணவி படித்து வந்தார். ஒரு நாள் ஃப்ரேயா பள்ளி முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ்சை நோக்கி காத்திருந்தார்.
அப்போது அதே பள்ளயில் படிக்கும் சீனியர் மாணவன் ஒருவன் வந்து, இங்கேயே எவ்வளவு நேரம் நிற்பாய்? பஸ் வரும் வரை நாம் பள்ளியில் உள்ள செய்தி அறையில் காத்திருக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றான். அங்கு செய்தி அறையின் வெளிப்பகுதியில் பேரி மரங்கள் நிறைந்து காணப்படும்.
அந்தப்பகுதியில் சென்ற போது அந்த மாணவன் ஃப்ரயாவை வற்புறுத்தி பலவந்தமாக பேரி மரத்தடியில் வைத்து செக்ஸ் பலாத்காரம் செய்தான்.
மாணவி அதிர்ச்சியடைந்து அடுத்த நாள் பெற்றோருடன் பள்ளி நிர்வாகியிடம் புகார் அளித்தார். அவர் நடவடிக்கை எடுக்காததால் மாகாண கல்வி அதிகாரியிடம் புகார் அளித்தனர். கல்வி அதிகாரி விசாரணையில், மாணவி ஃப்ரேயாவிடம் பள்ளி நிர்வாகி தவறான கேள்விகளை கேட்டது தெரிய வந்தது. மாணவியிடம் பள்ளி நிர்வாகி, உன்னை செக்ஸ் தொந்தரவு செய்யும்போது நீ ஏன் அவனது ஆண்குறியை கடிக்கவில்லை? அல்லது காலை நெருக்கி வைத்து பலாத்காரத்தை தடுத்திருக்கலாமே? நீ என்ன வகை ஆடை அணிந்திருந்தாய் என்று தேவையில்லாத கேளிவிகளை கேட்டதாக கல்வி அதிகாரிக்கு தெரிய வந்தது. பின்னர் அந்த பள்ளி நிர்வாகி மீது வழக்கு போடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பல மாணவிகள் செக்ஸ் பலாத்காரம் செய்யப்படுகிறார்கள். ஆனால், அவர்கள் நிர்வாகிகளின் தேவையற்ற கேள்விகளுக்கு பயந்து வெளியே சொல்வதில்லை என்று கல்வி அதிகாரி தெரிவித்தார்.