Home ஆரோக்கியம் ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

ஆண்கள் 35 வயது தொடக்கத்தில் செய்ய வேண்டிய பரிசோதனைகள்

26

30112115853ஆண்கள் 35 வயதிற்கு மேல் கட்டாயம் ஒரு சில பரிசோதனைகளை செய்துக்கொள்வது அவர்களது உடல்நலத்திற்கும், அவர்களை நம்பியிருக்கும் அவர்களது குடும்ப நலத்திற்கும் நன்மை விளைவிக்கும்..

முன்பெல்லாம் தங்களது பெற்றோருக்கு நீரிழிவு இருந்தால் தான், தங்களுக்கும் வருமோ என்ற பயம் இருந்து வந்தது. ஆனால், இப்போது நமது உணவுமுறை மாற்றம் மற்றும் உணவுப் பொருட்களில் கலக்கபப்டும் இரசாயனங்களின் பின்விளைவுகளின் காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுகிறது. தாகம் எடுத்துக்கொண்டே இருப்பது, அதிகமாக சிறுநீர் வெளிப்படுவது, திடீர் உடல் எடை குறைவு, உடல் சோர்வு, காயங்கள் விரைவாக குணமாகாமல் இருத்தல் போன்ற அறிகுறிகள் தென்படும்.

இரத்த பரிசோதனையின் மூலமாகவே, நீரிழிவு இருக்கிறதா? இல்லையா? என அறிந்துக்கொள்ளலாம். அதிகப்படியான இரத்த சர்க்கரை அளவை வைத்து நீரிழிவு நோய் இருக்கிறதா என ஊர்ஜிதம் செய்யப்படும். முக்கியமாக உங்கள் உடல் எடையில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

இன்றைய அவசர முறை வாழ்க்கையில் இரத்தக் கொதிப்பு இலவச இணைப்பாக ஒட்டிக்கொள்கிறது. பருவ வயதுடையவர்களுக்கும் கூட இரத்தக் கொதிப்பு ஏற்படுகிறது என்பது தான் அதிர்ச்சியான செய்தி. இது, உங்கள் இதயம், சிறுநீரகம் போன்ற பாகங்களை பாதிக்கிறது. இரத்தக் கொதிப்பை அறிந்துக்கொள்ள எந்த அறிகுறிகளும் இல்லை. 40 வயதை நெருங்குவோர், வருடத்திற்கு ஒருமுறை நீங்களாக பரிசோதனை செய்து தெரிந்துக்கொள்வது நல்லது. பெரும்பாலும் 40 வயதைக் கடக்கும் ஆண்கள் இரத்தக் கொழுப்பு பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். பெண்களை விட ஆண்களுக்கு தான் அதிகமாக மாரடைப்பு பாதிப்பு ஏற்படுகிறது. இரத்தக் கொழுப்பு அதிகமாவதால் தான் இருதய பாதிப்புகள் அதிகமாக ஏற்படுகிறது.

இரத்தக் கொதிப்பை போல, இரத்தக் கொழுப்பிற்கும் இது தான் அறிகுறி என்று ஏதும் இல்லை. நீங்கலாக பரிசோதனை செய்து தான் தெரிந்துக்கொள்ள வேண்டும். இதில் இரண்டு கொழுப்பு வகைகள் இருக்கின்றன. எச்.டி.எல் (நல்ல கொழுப்பு), எல்.டி.எல் (தீயக் கொழுப்பு). எல்.டி.எல் கொழுப்பு தான் இதயப் பிரச்சனைகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.

வயிற்றில் இருக்கும் கொழுப்பு, உங்கள் உடல்நலத்தை பாதிக்கும் ஒரு வகையான நச்சு என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இது, வயிற்றின் அருகில் இருக்கும் உடல் உறுப்புகளையும் பாதிக்குமாம். வயிற்றில் சதை தொங்க ஆரம்பித்தல் தான் இதற்கான அறிகுறி. உங்கள் இடுப்பின் அளவு 38 அங்குலத்தை தாண்டாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.