Home பாலியல் ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்?

ஆண்கள் மாதம் எத்தனை முறை உச்சம் காண வேண்டும்?

35

சிலருக்கு இது சிலிர்ப்பூட்டலாம், சிலருக்கு இது ச்சீ சொல்ல வைக்கலாம். சமீபத்தில் ஹார்வர்ட் டி.எச் சான் சுகாதார பள்ளியின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் அதிகமாக சுய இன்பம் காணும் ஆண்களும், அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்தில் இருந்து விலகி இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வு!
இந்த ஆய்வில் 32 ஆயிரம் ஆண்கள் கலந்து கொண்டனர். இதில் அதிகளவில் சுய இன்பம் காணும் ஆண்கள், மற்றும் அதிகமாக உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அபாயம் குறைவாக இருப்பதை அவர்கள் ஆய்வின் முடிவில் அறிந்தனர்.
21 முறை!
மாதத்திற்கு 21 முறை சுய இன்பம் அல்லது உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் 33 சதவீதம் வரை புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக இருக்கிறதாம்.
குறைவாக…
மிக குறைந்த எண்ணிக்கையில் உடலுறவில் ஈடுபடும் ஆண்கள் மத்தியில் அல்லது குறைந்த அளவில் உச்சக்கட்ட இன்பம் அடையும் ஆண்கள் மத்தியில் தான் புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது என ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
சுய இன்பம்!
இந்த ஆய்வில், ஆண்கள் சுய இன்பம் காண்பது, புரோஸ்டேட் புற்றுநோய் நோயில் இருந்து விலகி இருக்க சிறந்த பாதுகாப்பு காரணியாக இருக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
100%
ஒரு மாதத்தில் ஆண்கள் அதிகளவில் உச்சக்கட்ட இன்பம் அடைவதன் மூலம் புரோஸ்டேட் புற்றுநோய் சிறப்பாக இருக்கும் என்பதை ஆய்வாளர்கள் நூறு சதவீதம் ஊர்ஜிதமாக கூறவில்லை. ஆனால், இதன் மூலம் நன்மைகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.
யாரும் விரும்ப மாட்டார்கள்?
தற்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள் மத்தியில் புரோஸ்டேட் புற்றுநோய் அதிகரித்து வருகிறது. அதுவும் அந்த இடத்தில் புற்றுநோய் வர யார் தான் விரும்புவார்கள்.
எனவே, எப்படி பெண்கள் நடுவயதில் மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டுமோ, அதே போல ஆண்களும் புரோஸ்டேட் புற்றுநோய் பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டியது அவசியம்.